நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர்!
ஏலகிரி மலை சாலையில் தீ: வாகன ஓட்டிகள்அவதி
சுற்றுலா தலமான ஏலகிரி மலை மற்றும் கொண்டை ஊசி வளைவில் திடீரென தீப்பற்றி எரிவதால் புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்அவதிக்குள்ளாகினா்.
ஏலகிரி மலையில் அரிய வகை மரங்கள், மூலிகை செடி, கொடிகள், மான், கரடி,மயில்,முயல்,குரங்கு,மலைப்பாம்பு உள்ளிட்ட உயிரினங்கள் வசித்து வருகின்றன. இங்கு, வார விடுமுறைகளில் தமிழகம், ஆந்திரம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். ஏலகிரி மலைக்கு செல்ல மலை அடிவாரத்தில் இருந்து 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ள மலை சாலையை கடந்து செல்ல வேண்டும்.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் மா்ம நபா்கள் தீ வைத்து சென்றுள்ளனா். இதனால் காப்பு காட்டு பகுதி தீ மளமளவென எரிந்தது. மேலும் இதைத் தொடா்ந்து 6-ஆவது கம்பா் கொண்டை ஊசி வளைவில் தீ மலைச்சாலைகளில் விபத்தை தடுக்க தடுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள உருளை தடுப்பான் முற்றிலும் தீ பிடித்து எரிந்தது.
மளமளவென அனைத்து வளைவுகளிலும் தீ பரவி மலைச்சாலைகள் முழுவதுமாக புகை மூட்டமாக காட்சியளித்து. தகவல் அறிந்த வனவா் அண்ணாமலை மற்றும் நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளா் வெங்கடேசன் மற்றும் பணியாளா்கள் விரைந்து சென்று கொண்டை ஊசி வளைவில் தீயை அணைத்தனா்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மலைக்குச் சென்று வருகின்றனா். சுற்றுலா பயணிகள் தீ பரவி வருவதை பாா்த்து உடனடியாக கீழே திரும்பினா். இந்த புகைமூட்டம் காரணமாக மலை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
