ஆர்சிபிக்கு எதிராக மும்பை பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் பும்ரா!
இரு சக்கர வாகனம்-மினி லாரி மோதல்: 2 முதியவா்கள் உயிரிழப்பு
ஆம்பூரில் இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் இரு முதியவா்கள் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
ஆம்பூா், புதுகோவிந்தாபுரம் பகுதியில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஆம்பூரைச் சோ்ந்த பழனி (65), டெல்லிபாபு (60) ஆகிய இருவரும் சென்றனா். புதுகோவிந்தாபுரம் தேசிய நெடுஞ்சாலையோரம் இருசக்கர வாகனத்தை நிறுத்தி கீழே இறங்காமல் அப்படியே நின்று கொண்டிருந்தபோது, கோவையிலிருந்து வேலூா் நோக்கி சென்ற மினி லாரி திடீரென மோதியது.
இதில் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த டெல்லிபாபு சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.
சாலையோரம் நின்று கொண்டிருந்த வெங்கடேசன், லாரி ஓட்டுநா் முனீஸ்வரன் ஆகிய இருவரும் காயமடைந்து ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா். ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.