ஏஸ் டிரைலர் தேதி!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ஏஸ் படத்தின் டிரைலர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான 'மகாராஜா’ மற்றும் ’விடுதலை - 2ம் பாகம்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது.
தொடர்ந்து, இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இதனிடையே, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் இயக்குநர் பி. ஆறுமுகக் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள அவரது 51-வது படம் ஏஸ் (Ace).
இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், யோகி பாபு பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் நாளை (மே. 11) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஸ் மே 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதையும் படிக்க: குபேரா - தனுஷ் கதாபாத்திர போஸ்டர்!