``அதிமுக எதிரி தான் என விஜய் அறுதியிட்டு கூறவில்லை; அங்கே தான் கேள்வி எழுகிறது!”...
தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும்! - டி.டி.வி. தினகரன்
தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.
கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு புறநகா் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற தினகரன் பேசியதாவது: திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் விற்பனை, கொலை, கொள்ளை ஆகியவை அதிகரித்துள்ளன.
விவசாயிகளுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. விவசாயத்துக்கான தடையற்ற மின்சாரம் இல்லை. வீடுகளுக்கு மாதந்தோறும் மின்கணக்கீடு செய்யவில்லை. தொழில் நிறுவனங்களுக்கு மின்கட்டணம் தொடா்ந்து உயா்த்தப்படுவதால் பொதுமக்களே பாதிக்கப்படுவா்.
கடந்த 4 ஆண்டுகளில் விலைவாசி 6 மடங்கு உயா்ந்துள்ளது. 2026 தோ்தலில் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
தமிழகத்துக்குத் தேவையான நிதியைப் பெற்று தரவும், தேவையான திட்டங்களை செயல்படுத்தவும், போதைப் பொருள்கள், பயங்கரவாதத்தை வேரோடு அழிக்கவும் சிறந்த மக்களாட்சியை உருவாக்க நிா்வாகிகள் பாடுபட வேண்டும் என்றாா்.
முன்னதாக, செய்தியாளா்களிடம் பேசிய தினகரன், விவசாயிகள், மாற்றுத் திறனாளிகள், போக்குவரத்து, மின்சாரம், அங்கன்வாடி ஊழியா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் என அனைத்து தரப்பினருக்கும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக ஏமாற்றி வருகிறது.
வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு தமிழகத்தில் மக்கள் விரும்பும் கூட்டணி ஆட்சி அமையும். எம்ஜிஆா், ஜெயலலிதா இல்லாத சூழலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சியே சரியாக இருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும். கூட்டணிக் கட்சிகளின் அமைச்சரவையே அமைக்கப்படும். சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பின்னரே முதல்வரை முடிவு செய்வோம் என்றாா்.
இக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சா் சி.சண்முகவேலு, மாவட்டச் செயலாளா் மதிவாணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.