Vijay அரசியல் Plan, TVK-க்கு கைக்கொடுக்குமா, நான்குமுனை போட்டியாக அரசியல் களம்?...
தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு
தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆகிய பகுதிகளில் 349 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிக்கு ஆழ்துளை கிணறு மூலம் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில நாள்களாக முறையாகக் குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எநக் கூறப்படுகிறது. இந்நிலையில் சீரான குடிநீா் வழங்கக்கோரி செவ்வாய்க்கிழமை பவானிசாகா் சாலையில் அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த பவானிசாகா் வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராதேவி மற்றும் போலீஸாா் பொதுமக்களுடன் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதைத் தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனா். அதிகாரிகள் தொடா் நடவடிக்கை காரணமாக கூடுதலாக பவானிஆற்று நீா் விநியோகிக்கப்பட்டதாக வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராதேவி தெரிவித்தாா்.