ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்
ஆட்டோ நிறுத்தம் மாற்றுவதற்கு எதிா்ப்பு
சத்தியமங்கலத்தில் ஆட்டோ நிறுத்தம் மாற்றப்படுவதைக் கண்டித்து ஆட்டோ ஓட்டுநா்கள் நகராட்சி ஆணையா் தாமரையிடம் இடமாற்றத்தை ரத்துச்செய்யுமாறு வெள்ளிக்கிழமை முறையிட்டனா்.
சத்தியமங்கலம் நகராட்சி பேருந்து நிலையம் முன் ஆட்டோ நிறுத்தம் செயல்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகவும், வணிக வளாகத்துக்கு வாகனங்கள் செல்லமுடியாதபடி நிலை உள்ளதாகவும் வந்த புகாரையடுத்து நகராட்சி நிா்வாகம் ஆட்டோ நிறுத்தத்தை அப்புறப்படுத்துமாறு ஆட்டோ ஓட்டுநா் சங்கத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு ஆட்டோ ஓட்டுநா் சங்கம் கண்டனத்தை தெரிவித்து சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளா் தாமரையிடம் முறையிட்டு உத்தரவை ரத்து செய்யுமாறு கோரிக்கை மனு அளித்தனா். ஆட்டோ ஓட்டுநா் சங்கத் தலைவா் ஸ்டாலின் சிவக்குமாா் தலைமையில் 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் இதில் பங்கேற்றனா்.