செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
அவல்பூந்துறையில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம்
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.66 லட்சத்துக்கு தேங்காய்ப்பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு, 102 தேங்காய்ப்பருப்பு மூட்டைகள் வரத்து இருந்தது. இதில் முதல்தர தேங்காய்ப் பருப்பு ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.242.90-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.248.90-க்கும், சராசரி விலையாக ரூ.246.99-க்கும் விற்பனையானது.,
இதேபோல இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.150-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.233.90-க்கும், சராசரி விலையாக ரூ.226-க்கும் ஏலம் போனது. மொத்தம் 2,457 கிலோ தேங்காய்ப்பருப்பு ரூ.5.66 லட்சத்துக்கு விற்பனையானது.