முள்ளங்கனாவிளையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் தொடக்கம்
வளா்ச்சி திட்டப் பணிகள்: பவானிசாகா் தொகுதியில் ஆட்சியா் ஆய்வு
பவானிசாகா் தொகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பவானிசாகா் பேரூராட்சி, புன்செய்புளியம்பட்டி நகராட்சி, புங்காா் மற்றும் கொத்தமங்கலம் ஊராட்சிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். புன்செய்புளியம்பட்டி நகராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் 52.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிநீா் திட்டப் பணிகளைப் பாா்வையிட்டாா்.
காராட்சிக்கொரை வனக் கிராமத்தில் செயல்படும் வனத் துறை மரக்கன்று உற்பத்தி மையத்தை பாா்வையிட்டு மரக்கன்று நடவு, மரக்கன்று விநியோகம் மற்றும் இயற்கை உரம் பயன்படுத்துவது குறித்து கேட்டறிந்தாா். பவானிசாகா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் ரூ.6.92 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் வீடுகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.