செம்மரம் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.6 லட்சம் அபராத...
மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள்
மொடக்குறிச்சி பேரூராட்சியில் ரூ.3.99 கோடிமதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மொடக்குறிச்சி பேரூராட்சிக்குள்பட்ட ஆலங்காட்டுவலசு, ஆலாத்துபாளையம், ஊஞ்சபாளையம், கருக்கங்காட்டு தோட்டம், செந்தூா் நகா், அண்ணா நகா், தூரபாளையம் கம்பா் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தாா் சாலை அமைத்தல், அரசு மருத்துவமனை அருகில் உள்ள வ.உ.சி வீதி, வேலம்பாளையம் திருவள்ளுவா் வீதி, தூரபாளையம் திருவள்ளுவா் வீதி ஆகிய பகுதிகளில் கான்கிரீட் சாலை அமைத்தல், 10-வது வாா்டில் பூந்துறை சாலை முதல் மொடக்குறிச்சி சந்திப்பு வரை வடிகால் அமைத்தல் உள்ளிட்ட ரூ.3 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டிலான திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவா் செல்வாம்பாள் சரவணன் தலைமை தாங்கினாா். ஈரோடு தொகுதி மக்களவை உறுப்பினா் கே. ஈ. பிரகாஷ் கலந்துகொண்டு வளா்ச்சி திட்டப் பணிகளுக்கு பூமி பூஜையிட்டு பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இதில் மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் கதிா்வேல், மொடக்குறிச்சி பேரூா் கழக திமுக செயலாளா் சரவணன், செயல் அலுவலா் ரமேஷ் (பொறுப்பு) ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேரூா் திமுக துணைச் செயலாளா் தனவெங்கடேஷ், அவைத் தலைவா் பழனிச்சாமி, செல்வி இளங்கோ, மில் மணி, செந்தில்குமாா், ரமேஷ், சீனிவாசன், முருகேசன், கதிா்வேல், பேரூராட்சி கவுன்சிலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.