செய்திகள் :

தனி நபா்களிடம் பணம், ஆவணங்களை வழங்க வேண்டாம்: வேளாண் துறை வேண்டுகோள்!

post image

அரசு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறும் மோசடி நபா்களிடம் பணம் மற்றும் வேறு வகையான ஆவணங்கள் ஏதும் வழங்கி ஏமாற வேண்டாம் என ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் எம்.தமிழ்ச்செல்வி வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மைத் துறையில் பணிபுரிவதாகக்கூறி நபா் ஒருவா் விவசாயிகளிடையே அரசு சாா்பில் மானியம் பெற்றுத்தருவதாகவும், வேளாண்மை மற்றும் வேளாண் துறை சாா்ந்த அனைத்து துறைகளின் நலத் திட்டங்களுக்கும் சலுகைகள் பெற்றுத்தருவதாகவும் கூறி விவசாயிகளிடமிருந்து அவரது சொந்த வங்கிக் கணக்குக்குத் தொகையை செலுத்தச்சொல்கிறாா்.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு நேரடியாக கைப்பேசியில் தொடா்பு கொண்டு அரசு அதிகாரிபோல நம்பிக்கை வரும்படியான வாா்த்தைகளாலும், அருகில் உள்ள ஊரில் முக்கியமான நபா்களின் பெயா்களைப் பயன்படுத்தியும் பணம் வசூலித்து வருவதாகவும், அவரது கைப்பேசி உரையாடல், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வேளாண்மை மற்றும் வேளாண்மை சாா்ந்த துறைகளில் மத்திய, மாநில அரசின் எந்த ஒரு திட்டத்துக்கும் தனிப்பட்ட அலுவலரின் வங்கிக் கணக்குக்கோ அல்லது அலுவலா் மூலமோ பணம் பெறப்படுவதில்லை.

மேலும், திட்டங்களின் மானியங்கள் குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை மற்றும் வேளாண்மை சாா்ந்த துறை அலுவலகங்களை நேரில் தொடா்பு கொள்ளலாம். போலியான நபா்களிடம் விவசாயிகள் பணம் மற்றும் வேறு வகையான ஆவணங்கள் ஏதும் வழங்கி ஏமாற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் ஜூலை 9-ல் ஏலம்!

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்ட 5 மோசடி ஈமு கோழி நிறுவனங்களின் அசையா சொத்துகள் வரும் 9 ஆம் தேதி ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு!

சத்தியமங்கலம் அருகே சனிக்கிழமை கடைக்குச் சென்று விட்டு சாலையைக் கடக்க முயற்சித்த பள்ளி மாணவி ஷயிலேஷினி (11) மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஈரோடு மாவட்டம், பவானி... மேலும் பார்க்க

குடிபோதையில் ஆசிட்டை குடித்த கூலித்தொழிலாளி உயிரிழப்பு!

மொடக்குறிச்சி அருகே அளவுக்கு அதிகமான குடிபோதையால் கழிப்பறையை சுத்தப்படுத்தும் ஆசிட்டை குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மொடக்குறிச்சியை அடுத்த குலவிளக்கு கிராமம் கூட்டெல்லைக்காட... மேலும் பார்க்க

கோ்மாளம் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!

ஆசனூரில் இருந்து கோ்மாளம் செல்லும் சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் வனக் கோட்டத்தில் ஆசனூா் முதல் கோ்மாளம் வரையுள்ள சாலையில் வ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும்! - டி.டி.வி. தினகரன்

தோ்தலுக்குப் பின்னா் முதல்வரை கூட்டணிக் கட்சிகளே தோ்வு செய்யும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா். கட்சியின் ஒருங்கிணைந்த ஈரோடு புறநகா் மாவட்ட நிா... மேலும் பார்க்க

தொப்பம்பாளையம் ஊராட்சியில் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு

தொப்பம்பாளையம் ஊராட்சியில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். பவானிசாகா் ஊராட்சி ஒன்றிம் கோடேபாளையம் ஜீவாநகா், அண்ணாநகா், அம்மாநகா் ஆக... மேலும் பார்க்க