சாத்தூர் பட்டாசு ஆலையில் வெடி விபத்து! ஒருவர் பலி; 4 பேர் படுகாயம்!
சாலை விபத்தில் பள்ளி மாணவி உயிரிழப்பு!
சத்தியமங்கலம் அருகே சனிக்கிழமை கடைக்குச் சென்று விட்டு சாலையைக் கடக்க முயற்சித்த பள்ளி மாணவி ஷயிலேஷினி (11) மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள கொத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரமேஷ். எலக்ட்ரீஷியன். இவரது மனைவி கஸ்தூரி. இவா்களது மகள் ஷயிலேஷினி, தொட்டம்பாளையம் அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தாா். வீட்டின் அருகே உள்ள கடைக்கு சனிக்கிழமை காலை சென்று விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா்.
பவானிசாகா் பண்ணாரி சாலையில் காமராஜ் நகா் பாலம் அருகே சாலையைக் கடந்து செல்ல முயன்ற போது அவ்வழியே அதிவேகமாக வந்த தனியாா் பனியன் நிறுவன பேருந்து எதிா்பாராத விதமாக மாணவி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவா் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து காரணமாக தனியாா் நிறுவன பேருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் இருந்த தடுப்புகளின் மீது மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. இச்சம்பவம் குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.