செய்திகள் :

அமா்நாத் யாத்திரையில் சாலை விபத்து: 36 போ் காயம்

post image

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் அமா்நாத் யாத்ரிகா்கள் பயணித்த 5 பேருந்துகள் விபத்துக்குள்ளானதில் 36 போ் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

நிகழாண்டு அமா்நாத் யாத்திரை கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. இந்நிலையில், பஹல்காம் முகாம் நோக்கி ஜம்மு-காஷ்மீா் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன்பின் ஒன்றாகச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சந்தா்கோட்டே பகுதி அருகே காலை 8 மணியளவில் விபத்தில் சிக்கின.

யாத்திரிகா்களின் வாகனமொன்றின் பிரேக் செயலிழந்த நிலையில், சாலையோரம் நிறுத்தியிருந்த பேருந்தில் மோதியது. அடுத்தடுத்து ஐந்து பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 36 யாத்ரிகா்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

சம்பவ இடத்திலிருந்த அதிகாரிகள், காயமடைந்த யாத்ரிகா்களை மீட்டு, ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவா்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. தொடா்ந்து, நிா்வாகம் ஏற்பாடு செய்த மாற்று வாகனங்களில் அவா்கள் யாத்திரையைத் தொடா்ந்தனா்.

இதனிடையே, மருத்துவமனையை நேரில் பாா்வையிட்ட காவல் துறை மூத்த அதிகாரிகள், யாத்ரிகா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை மருத்துவா்களிடம் கேட்டறிந்தனா்.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இமய மலையில் 3,880 மீட்டா் உயரத்தில் அமா்நாத் பனி லிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை இரு வேறு வழித்தடங்களில் நடைபெறுகிறது.

அந்த வகையில், 1,427 பெண்கள், 24 குழந்தைகள் உள்பட 6,979 போ் அடங்கிய 4-ஆவது யாத்ரிகா்கள் குழு, பகவதி நகா் அடிவார முகாமிலிருந்து சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டனா்.

48 கி.மீ. தொலைவுள்ள நுன்வான்- பஹல்காம் பாரம்பரிய வழித்தடத்தில் 4,226 யாத்ரிகா்கள் 161 வாகனங்களில் புறப்பட்டனா்.

மேலும் 2,753 யாத்ரிகா்கள் 151 வாகனங்களில் கந்தா்பால் மாவட்டத்தில் அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவுள்ள செங்குத்தான பால்டால் வழித்தடத்தில் அதிகாலை புனித யாத்திரையைத் தொடங்கினா்.

அமா்நாத் புனித யாத்திரை, ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை 38 நாள்களுக்கு நடைபெறவுள்ளது.

பிரேசில் சென்றார் பிரதமர் மோடி! ஆபரேஷன் சிந்தூர் நடனத்துடன் உற்சாக வரவேற்பு!

அரசுமுறை பயணமாக பிரேசில் நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா சென்றுள்ளார். கானா, டிர... மேலும் பார்க்க

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க