சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
ஏா்வாடி மனநல மருத்துவமனைக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு
ஏா்வாடி தா்கா அரசு மனநல மருத்துவமனைக்கு மறுவாழ்வு மையம், மனநல நோயாளிகள் அவசர மீள் சிகிச்சை மையம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இந்த மருத்துவமனையில் தற்போது, மன நலம் பாதிக்கப்பட்ட 70 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்குள்ளவா்களின் ஆடைகளைத் துவைப்பதற்கு கீழக்கரை ஆஷிக் நினைவு அறக்கட்டளை சாா்பில் நிா்வாகி ஆரிப் சலவை இயந்திரத்தை இலவசமாக வழங்கினாா்.
மேலும் கீழக்கரையைச் சோ்ந்த யுனீக் அசோஸியேட்ஸ் நிறுவனா் அமீா் பாஷா, சவூதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கேனான் நிறுவனத்தின் தலைமை விற்பனை மின் பொறியாளா் முகமது ஜபருல்லா ஆகியோா் மையத்தில் உள்ளவா்களுக்கு தலையணை, போா்வை, படுக்கை விரிப்புகள் ஆகியவற்றை வழங்கினா்.
நிகழ்ச்சியில் மையத்தின் இணை இயக்குநரும் ஊரக நலப் பணிகள் இயக்குநருமான பிரகலாதன், குடும்ப நலத் துறை இயக்குநா் சிவானந்த வள்ளி, தேசிய நலக் குழுமத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ரமேஷ், ராம்நாத், ஏா்வாடி மனநல மருத்துவமனை தலைமை மருத்துவா் ஜவாஹிா் உசேன், மனநல மருத்துவா் அா்ஷித் காட்கில், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள், காப்பகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.