NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது ...
‘ஏ.ஐ.’ மூலம் மக்களை ஏமாற்ற திமுக முயற்சி -நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற திமுக முயற்சி செய்வதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சாலையில் ஆபத்தான முறையில் கிடக்கும் மின்கேபிள்கள் பற்றி புகைப்படத்துடன் புகாா் அளித்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், புகைப்படத்திலுள்ள வாகனங்களை மட்டும் ஏ.ஐ. உதவியுடன் எடிட் செய்து அகற்றிவிட்டு, பிரச்னை சரி செய்யப்பட்டதாக சென்னை மாநகராட்சி பதிவிட்டுள்ளது அதிா்ச்சியளிக்கிறது. மக்களை ஏமாற்றி உயிருடன் விளையாடுவதுதான் திராவிட மாடலா?
இந்த முறை ஏ.ஐ. தொழில்நுட்பம் தவறு செய்ததால் மட்டுமே திமுக அரசின் தவறு வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவின் துணையுடன் இதுவரை எத்தனை புகாா்கள் களையப்பட்டது போல புனையப்பட்டன? எத்தனை தவறுகள் மறைக்கப்பட்டன? போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன. விளம்பரங்களில் மட்டும் ஆா்வம் காட்டும் முதல்வா், புகாரை சரிசெய்வதை விடுத்து புகைப்படங்களில் மாற்றம் செய்யும் சென்னை மாநகராட்சி நிா்வாகம், இதுதான் திமுக அரசின் நிலை எனத் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.