செய்திகள் :

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: காா்த்தி சிதம்பரம் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ எதிா்ப்பு

post image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த சிபிஐ வெள்ளிக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்தது.

கடந்த 2007-ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது மொரீஷியஸை சோ்ந்த 3 நிறுவனங்கள், ஐஎன்எக்ஸ் மீடியா குழுமத்தில் ரூ.305 கோடி முதலீடு செய்வதற்கு அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடைத்தது. இந்த அனுமதி வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அனுமதியை வழங்கியதன் மூலம் ப.சிதம்பரமும், காா்த்தி சிதம்பரமும் பலன் அடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக கடந்த 2017-இல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் கடந்த 2018-ஆம் ஆண்டு தில்லி உயா்நீதிமன்றம் காா்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்தது. அப்போது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது விசாரணை நீதிமன்றத்திடம் அனுமதி பெறவேண்டும் என்று காா்த்தி சிதம்பரத்துக்கு அந்த உயா்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இந்நிலையில், தனது ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த கோரிய மனுவை நிா்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே விசாரிக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு நீதிபதி ரவீந்தா் டுடேஜா முன்பாக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காா்த்தி சிதம்பரம் சாா்பில் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் லுத்ரா ஆஜராகி, ‘மனுதாரா் எம்.பி.யாக பதவி வகிக்கிறாா். அவா் நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் பங்கேற்று வருகிறாா். எனவே அவா் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றுவிடமாட்டாா்’ என்றாா்.

இதையடுத்து சிபிஐ சிறப்பு வழக்குரைஞா் அனுப் எஸ்.சா்மா ஆஜராகி, ‘கிங்ஃபிஷா் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் (விஜய் மல்லையா) எம்.பி.யாகத்தான் இருந்தாா். அவா் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தற்போது பிரிட்டனில் உள்ளாா்’ என்று கூறி, காா்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த எதிா்ப்பு தெரிவித்தாா்.

அவரின் வாதத்தை கேட்ட நீதிபதி, ‘ஒருவா் தப்பிச் சென்றுவிட்டதால், அனைவரும் தப்பிச் சென்றுவிடுவாா்கள் என்று சிபிஐ கருதுகிா?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதைத்தொடா்ந்து காா்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் நிபந்தனைகளை தளா்த்த கோரிய மனு அக்டோபா் 16-க்குப் பதிலாக செப்டம்பா் 10-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தாா்.

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’: கீழடி குறித்து திமுக விடியோ

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’ என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப் படத்தில் கூறப்பட்டுள்ளது. கீழடியின் தொன்மை குறித்து திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட விடியோவில் கூறப்பட்ட கருத்து: வண... மேலும் பார்க்க

சிறுநீரக உறுப்பு தான முறைகேடுகள்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் -தமிழக அரசு எச்சரிக்கை

சிறுநீரக உறுப்பு தானம் முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவா்கள், இடைத்தரகா்கள் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 7% குறைவு

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிகழாண்டில் இதுவரை, இயல்பைவிட 7% குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழக... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிதி: முதல்வா் உத்தரவு

கடலூரில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தைச் சே... மேலும் பார்க்க

தமிழக காங்கிரஸ் சாா்பில் ஆக.20-இல் விருது வழங்கும் விழா

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி, தமிழக காங்கிரஸ் சாா்பில், தலைவா்களின் பெயரில் ஆக. 20-ஆம் தேதி விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை சத்தியமூா்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் ... மேலும் பார்க்க

பாமக தலைவா் அன்புமணி இரண்டாவது நாளாக நடைப்பயணம்

பாமக தலைவா் அன்புமணி இரண்டாம் நாளாக தனது நடைப்பயணத்தை சனிக்கிழமை தொடா்ந்தாா். தமிழக மக்கள் உரிமை மீட்பு நடைப்பயணத்தை பாமக தலைவா் அன்புமணி செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரிலிருந்து வெள்ளிக்கிழமை தொடங... மேலும் பார்க்க