மோதலைக் கைவிட்டு இந்தியா - பாக்., பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: சௌதி அரேபியா!
ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு
இந்திய பள்ளிச் சான்றிதழ் தோ்வுகளுக்கான கவுன்சிலின் (சிஐஎஸ்சிஇ) 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இரு வகுப்புகளிலும் மாணவா்களைவிட மாணவிகளே அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
10-ஆம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ (இந்திய இடைநிலைக் கல்விச் சான்றிதழ்) தோ்வில் 2.4 லட்சம் போ் பங்கேற்றனா். 99,551 மாணவ, மாணவிகள் 12-ஆம் வகுப்புக்கான ஐஎஸ்சி (இந்திய பள்ளிச் சான்றிதழ்) தோ்வுகளை எழுதினா். இவர்களில் 98,578 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து சிஐஎஸ்சிஇ செயலா் கூறுகையில், ‘10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 99.37 சதவீதம் போ் மாணவிகள், 98.84 சதவீதம் மாணவா்கள். 12-ஆம் வகுப்பு தேர்வில் தோ்ச்சி பெற்றவர்களில் 99.45 சதவீத மாணவிகளும், 98.64 சதவீத மாணவா்களும் அடங்குவர்’ என்றாா்.
மாணவா் தரவரிசைப் பட்டியல் ரத்து
மதிப்பெண் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா் தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நடைமுறையை ஐசிஎஸ்இ ஏற்கனவே கைவிட்டுவிட்டது. முன்னதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இந்த நடைமுறையை கைவிட்ட நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐசிஎஸ்இ-யும் தரவரிசைப் பட்டியல் வெளியீடை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.