செய்திகள் :

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முக்கியத்துவம் என்ன? ஷேன் வாட்சன் விளக்கம்!

post image

2025ஆம் ஆண்டுக்கான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் முக்கியத்துவம் குறித்து முன்னாள் ஆஸி. வீரரும் ஐசிசியின் தூதுவருமான ஷேன் வாட்சன் பேசியுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடைபெறும் அட்டவணை குறித்து டிச.2024இல் அறிவித்தது. இதில் இந்தியாவை தவிர மற்ற அனைத்து அணிகளும் பாகிஸ்தானில் விளையாடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 20 ஆம் தேதி இந்திய அணி அதன் முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி பிப்ரவரி 23 ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது.

இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதிப்போட்டியானது துபையில் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐசிசி தூதரான வாட்சன் (43) கூறியதாவது:

சாம்பியன்ஸ் டிராபியின் அழகு

விளையாடும் நோகத்தில் சொல்லவேண்டுமானால் சாம்பியன்ஸ் டிராபி சிறப்பான ஒரு தொடர். ஆண்டு முழுவதும் இருதரப்பு தொடர்களில் விளையாடுவது சற்று சலித்து போகலாம். அது ரசிகர்களுக்கும் சலிப்படைய வைக்கும்.

சாம்பியன்ஸ் டிராபியில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்கின்றன. ஒரு அணியாக நீங்கள் ஆடுகளத்தின் அனைத்து பக்கங்களிலும் குறைவான நேரத்தில் அதிகமாக ஓட வேண்டும். இல்லையெனில் 2013இல் ஆஸ்திரேலிய அணி போல வெளியேற்றப்படுவீர்கள்.

இந்த சாம்பியன்ஸ் டிராபியின் அழகே 8 அணிகள் மட்டுமே பங்கேற்கும். உலகக் கோப்பையில் சிறிய அணிகளும் பங்கேற்கும். ஆனால், இதில் உள்ள எல்லா அணிகளும் அனுபவம் வாய்ந்தவை. முதல் போட்டியில் இருந்தே நீங்கள் உங்களது சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும். அது எனக்கு மிகவும் பிடிக்கும்.

பாகிஸ்தான் ரசிகர்களுக்கு விருந்து

அனைத்து பந்துகளுக்குமே முக்கியத்துவம் உள்ளதால் ஒவ்வொரு போட்டியும் அதிக மதிப்பு மிக்கதாக இருக்கும். அது எனக்கு பிடிக்கும்.

பாகிஸ்தானில் நடைபெறுவதால் அதன் ரசிகர்களுக்கு மிகுந்த சாதகமாக இருக்கும். உலக தரத்திலான கிரிக்கெட்டினை சொந்த நாட்டில் அனுபவிக்கலாம். நானும் அதேபோல் ஒரு சிறிய அனுபவத்தை பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடும்போது உணர்ந்தேன்.

முதலில் 2005இல். பின்னர் 2019இல் அந்த அனுபவத்தை அனுபவித்தேன். அவை எல்லாமே எனது கிரிக்கெட் வாழ்க்கையின் முக்கியமான கால்கட்டங்கள். நிறைய நாட்களுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தான் செல்கிறேன்.

நேரலையாக உலகத் தரத்திலான கிரிக்கெட்டினை பாகிஸ்தான் மக்கள் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள். ஐசிசி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால் அந்த நாடே ஒளிறவிருக்கிறது என்றார்.

பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய தென்னாப்பிரிக்கா!

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள... மேலும் பார்க்க

உள்ளூர் போட்டிகளில் ரோஹித் சர்மா விளையாட வேண்டும்; பயிற்சியாளர் கருத்து!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் தினேஷ் லாட் தெரிவித்துள்ளார்.பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணி பார்டர் - க... மேலும் பார்க்க

10 ஆயிரம் ரன்கள் சாதனையை தவறவிட்ட ஸ்டீவ் ஸ்மித் கூறியதென்ன?

இந்தியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்கள் அடிக்கும் வாய்ப்பினை ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஒரு ரன்னில் தவறவிட்டார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளு... மேலும் பார்க்க

பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி: உஸ்மான் கவாஜா

சிட்னி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீசாததில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ... மேலும் பார்க்க

இந்தியர்களின் உளவியல் யுக்தி (2 vs 11) பலனளிக்கவில்லை: மிட்செல் ஜான்சன்

புதிதாக அணியில் இணைந்த சாம் கான்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டரை அச்சுறுத்தி வெற்றிபெறலாம் என நினைத்த இந்தியர்களின் உளவியல் யுக்தி பலனளிக்கவில்லை என முன்னாள் ஆஸி. வீரர் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார். பார்டர் - ... மேலும் பார்க்க

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டேன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவில் நிறைய கற்றுக் கொண்டதாக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நேற்றுடன... மேலும் பார்க்க