செய்திகள் :

ஐடி ஊழியர் தற்கொலை: நேரலையில் மனைவி மீது குற்றச்சாட்டு!

post image

மனைவி ஏற்படுத்திய மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொள்வதாகக் கூறி நேரலையில் பதிவு செய்து ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

உ.பி. மாநிலத்தின் ஆக்ராவில் உள்ள டிஃபன்ஸ் காலனியில் வசிப்பவர் மானவ் சர்மா (30). ஐடி ஊழியரான இவர் நிகிதா சர்மா என்ற பெண்ணை ஜனவரி 30, 2024 அன்று திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்தவுடன் மானவ் தனது மனைவியுடன் மும்பை சென்று வசித்தார். ஆரம்பத்தில் அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது. சில மாதங்களில் மானவுக்கும் நிகிதாவுக்கும் பிரச்னை ஏற்பட்டது. வாக்குவாதத்தில் மானவ் குடும்பத்தினர் மீது பொய்வழக்குப் போடவிருப்பதாக நிகிதா கூறியுள்ளார். மேலும், மானவ்வை பிரிந்துசென்று தனது காதலனுடன் வாழ்விருப்பதாகவும் நிகிதா மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப். 23 அன்று இருவரும் ஆக்ரா சென்றுள்ளனர். அங்கு நிகிதாவின் வீட்டிற்கு சென்றபோது மானவ் அவமானப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. விரக்தி மனநிலையில் தனது வீட்டிற்கு வந்த மானவ் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அதற்கான காரணத்தை நேரலையில் பதிவுசெய்த அவர், பிப். 24 அன்று காலை 5 மணியளவில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

இதையும் படிக்க | பாஜகவின் புதிய தேசியத் தலைவர் யார்? கட்சிக்குள் தொடரும் குழப்பம்!

மானவ் பதிவு செய்த நேரலையில் அவரது மனைவி நிகிதா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ”தனிமையில் இருக்கும் ஆண்களைக் குறித்து நினைத்துப் பார், என் இறப்பிற்கு பின் யாரும் எனது பெற்றோரைத் தொடாதே” என்று தெரிவித்துள்ளார்.

6.57 நிமிடங்கள் கொண்ட அந்த விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து, நிகிதா ஷர்மா தனது கணவரின் விடியோவுக்கு மறுப்புத் தெரிவித்து விடியோ வெளியிட்டார். அதில், ”மானவ் குறிப்பிட்டிருப்பது எனது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கையைப் பற்றியே. அதுகுறித்து அவருக்குத் தெரியவந்தபோது அவர் என்னை மிகவும் திட்டினார். என்னிடம் மோசமாக நடந்துகொண்டார். அவர் அதிகமாக மது அருந்துவார். அதுமட்டுமின்றி இதற்கு முனரும் பலமுறை அவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். நான் அதை மூன்று முறை தடுத்து நிறுத்தியுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க | சம்பல் ஜாமா மசூதியை சுத்தம் செய்ய இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவு!

மேலும், மானவ் தற்கொலை செய்துகொண்ட நாளில் நிகிதா மானவ்வின் சகோதரியிடம் இதுகுறித்து எச்சரிக்கை செய்துள்ளார். ஆனால், அதனை கண்டுகொள்ள வேண்டாம் என்று அவர் கூறிய நிலையில், மானவ்வின் தந்தைக்கு அழைத்துள்ளார். அவர் அழைப்பை ஏற்கவில்லை என்று நிகிதா விடியோவில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற இந்திய விமானப் படை அதிகாரியான மானவ்வின் தந்தை நரேந்திர சர்மா அளித்த புகாரின் பேரில் நிகிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் தளத்திலும் இந்தப் புகாரைப் பதிவு செய்துள்ளார்.

மானவ் உடலின் பிரேத பரிசோதனை பிப். 24 அன்று நடைபெற்றது. ஆனால், அப்போது எந்தப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை.

இருவரின் வாக்குமூலங்களையும் அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்துள்ளனர்.

ஐ.நா. துணை அமைப்புகளின் பணிகளில் வெளிப்படைத்தன்மை: இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் துணை அமைப்புகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை கோரி முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது அந்தக... மேலும் பார்க்க

கா்நாடக துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

காவிரியில் மேக்கேதாட்டு பிரச்னை குறித்து சா்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாருக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு) கண்டனம் தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

6.2% வளா்ச்சியுடன் மீண்டெழுந்த இந்திய பொருளாதாரம்

நிகழ் நிதியாண்டின் (2024-25) அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. முந்தைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) ஜிட... மேலும் பார்க்க

பிகாா், மேற்கு வங்கத்தில் பலத்த நில அதிா்வு

பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த நில அதிா்வு ஏற்பட்டது. நேபாள நாட்டில் வெள்ளிக்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதி... மேலும் பார்க்க

சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ

சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளிவெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள கருவி காட்சிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய விண்வெளி ஆய்வில் புதிய சகாப்தம் படைத்திருப்பதாகவும் தெரிவிக்கப... மேலும் பார்க்க

‘பிகாா் தோ்தலில் நிதீஷ் குமாா் தலைமையில் போட்டி’ - மத்திய அமைச்சா் மாஞ்சி

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் போட்டியிடுவோம் என மத்திய அமைச்சரும், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா தலைவருமான ஜிதன்ராம் மாஞ்சி (80) தெரிவித்தாா். தங்கள் கூட்டணியில் இணைய ... மேலும் பார்க்க