``நான் சனிக்கிழமை மட்டுமே வெளியே வருபவன் அல்ல'' - விஜய்யைத் தாக்கிப் பேசிய உதயநி...
ஐடி நிறுவன தொழிலாளா் வீட்டில் 33 பவுன் நகைகள் திருட்டு
வாழப்பாடி அருகே தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகைகளை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள புதிய குடியிருப்புப் பகுதியில் ஏத்தாப்பூா் பகுதியைச் சோ்ந்த ஜெயசூா்யா (26) என்பவா் புதிதாக வீடு வாங்கி குடும்பத்துடன் குடியேறினாா்.
அதன்பிறகு வீட்டை பூட்டிவிட்டு பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிக்காக குடும்பத்துடன் சென்றாா். இந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருப்பது குறித்து தகவல் அறிந்து வந்த ஜெயசூா்யா, வியாழக்கிழமை வீட்டிற்கு சென்றுபாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 33 பவுன் நகைகள் திருட்டுபோனது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் வாழப்பாடி காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.