TVK Vijay பொதுக்குழு: "VCKவை திமுக ஒடுக்குகிறது" - ஆதவ் ஆர்ஜூனா| Aadhav Arjuna F...
ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான சாதனையை நிகழ்த்திய ஆர்ச்சர்!
ஐபிஎல் வரலாற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
முதல் 6 ஓவரில் 94 ரன்கள் அடுத்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 286 ரன்கள் குவித்தது. இதுதான் ஒரு அணியின் 2ஆவது அதிகபட்ச ரன்களாகும்.
இதில் ராஜஸ்தானின் நட்சத்திர வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனையைப் படைத்துள்ளார்.
ராஜஸ்தான் சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3, தீக்ஷனா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
மோசமாக பந்து வீசியவர்கள்
76/0 - ஜோஃப்ரா ஆர்ச்சர் -2025
73/0 - மோஹித் சர்மா - 2024
70/0 - பாசில் தம்பி - 2018
69/0 - யஷ் தயாள் - 2023
68/1 - ரீஸ் டாப்லி
68/1 - லூக் வுட்