செய்திகள் :

ஐரோப்பா முதல் சீனா வரை : ட்ரம்ப் முடிவால் `ஆயுத’ முதலீட்டை அதிகரிக்கும் நாடுகள் - தாக்கம் என்ன?

post image

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடத்திய விதம், உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் எளிதில் அடங்காது என்பதற்கு சமீபத்திய எதிர்வினை நகர்வுகளே சான்று.

`ஆயுதமயமாக்கல்’

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான அணுகுமுறையில் மிகத் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ள ஐரோப்பியத் தலைவர்கள் இப்போது மீண்டும் ஆயுதமயமாக்கல் வெறிக்கு ஆளாகி இருப்பது உலக அளவில் பெரும் அச்சறுத்தலுக்கு வித்திட்டுள்ளது.

ட்ரம்ப் திடீரென உக்ரைனுக்கான அனைத்து அமெரிக்க ராணுவ உதவிகளையும் முடக்கி, ரஷ்யாவுக்கு பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் வழங்குவதற்கான ஆலோசனைகளில் ஈடுபடும் சூழலில், இன்னொருபுறம் நேட்டோ நட்பு நாடான கனடாவுடனும் சீனாவுடனுடம் வர்த்தக போரை தொடங்கியுள்ளார்.

ReArm Europe

இப்படியான சூழலில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டெர் லேயன், ‘ரீ-ஆர்ம் ஐரோப்பா’ (ReArm Europe) என்ற ஐந்து அம்சத் திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதாவது, வரும் ஆண்டுகளில் ஐரோப்பாவின் ஆயுதக் கிடங்குகள், பாதுகாப்பு உற்பத்தித் துறை தளம் மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்ப 800 பில்லியன் யூரோக்களை வழங்க இருப்பதாக அவர் கூறினார்.

தனது ஆக்ரோஷமான யுத்தங்கள் மூலம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், நீண்டகாலமாக நடுநிலை வகித்த ஸ்வீடன் மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளை நேட்டோ கூட்டணிக்குள் கொண்டுவந்து, அதன் விரிவாக்கத்துக்கு மறைமுக வினையூக்கியாக மாறியது போலவே, ஐரோப்பாவுக்கு ட்ரம்ப் ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளராக மாறியுள்ளார்.

பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்க ஐரோப்பிய நாடுகளை ட்ரம்ப் பல ஆண்டுகளாக வற்புறுத்தியது அவருக்குப் பலனளித்தாலும் கூட, அமெரிக்க வாக்குறுதிகள், பாதுகாப்பு அம்சங்களை அவர் கைவிட்டது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வான் டெர் லேயனின் இந்த புதிய திட்டம், உறுப்பு நாடுகளுக்கு பாதுகாப்பு செலவினங்களை அதிகரிக்கும் திறனை வழங்கவும், ஐரோப்பிய ஒன்றிய ஒருங்கிணைப்பு நிதிகளைப் பாதுகாப்புக்காகப் பயன்படுத்த அனுமதிக்கவும், பணப் பற்றாக்குறை உள்ள ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பு செலவினங்களை விரைவாக அதிகரிக்கவும் உதவும்.

வான் டெர் லேயன்

லண்டனில் நடந்த ஐரோப்பிய பாதுகாப்பு உச்சிமாநாட்டுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த மாநாட்டில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், உக்ரைனுக்கு அமெரிக்க உதவி நிறுத்தப்பட்ட நிலையில் அந்நாட்டை ஆதரிப்பதற்கும், ஐரோப்பாவின் பாதுகாப்புக்கான குறைந்த முதலீட்டை சரிசெய்வதற்கும் இந்த நிதி அதிகரிப்பை ஆதரித்தன.

இதே போன்றதொரு அறிவிப்பை ஜெர்மனியின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பிரீட்ரிக் மெர்ஸும் வெளியிட்டு, “ஜெர்மனியும் ஐரோப்பாவும் சுதந்திரத்துக்கு தயாராக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அதேநேரம் பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகள் தொடர்ந்து ட்ரம்பை சமாதானப்படுத்த முயற்சிப்பதற்கான காரணம், ஐரோப்பா மற்றும் நேட்டோவிலிருந்து அமெரிக்கா தனது ஆதரவை முழுமையாக விலக்கிக் கொள்வதன் மூலம் காணாமல் போகக்கூடிய பாதுகாப்பு திறன்களை மீண்டும் பெற ஐரோப்பாவுக்கு இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படும். இது ஐரோப்பாவுக்கு பெரும் தலைவலி. அது இந்த ஆண்டு கோடைக்காலத்துக்குள் இந்த தலைவலி உண்மையாகும் என்பதே அவர்களது அச்சம்.

பால்டிக் நாடுகள் போன்ற சிறிய நாடுகளுக்கும் இது மிகவும் கவலைக்குரிய விவகாரம். காரணம், அவை எதிர்காலத்தில் ரஷ்ய ஆக்கிரமப்பால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்று தற்போது பாதுகாப்புக்காக அமெரிக்க ராணுவத்தையே நம்பியுள்ளன.

சீன - ஐரோப்பிய உறவுகளில் மறுபரிசீலனை

ஐரோப்பியர்களின் இந்த பதற்றத்தை சீனா ஒரு வாய்ப்பாக பார்க்கிறது. சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசியபோது, “உக்ரைனில் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பா பங்கேற்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தது மட்டுமல்லாமல், சீன - ஐரோப்பிய உறவுகளில் மறுபரிசீலனையையும் முன்மொழிந்தார்.

ஸ்பெயினின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ் போன்ற சில ஐரோப்பிய தலைவர்களும் கூட சீனாவின் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். சீனாவுடனான உறவை மீட்டெடுப்பது உண்மையில் சில வாய்ப்புகளை வழங்கக்கூடும். ஆனால், இதில் குறிப்பிடத்தக்க சில ரிஸ்க்குகளும் இல்லாமல் இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பாவை போலவே சீனாவும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தனது பாதுகாப்புக்கு ஒரு மிகப் பெரிய தொகையை ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு சீன சட்டமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 245 பில்லியன் அமெரிக்க டாலர்களை சீனா தனது பாதுகாப்புக்காக செலவிடுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

தென் சீன கடலில் அமெரிக்கா, தைவான், ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டு உரிமை கோருவதால் ஏற்படும் பதற்றங்களே தனது பாதுகாப்பில் சீனா இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வதற்கான காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் பாதுகாப்புச் செலவு இன்னும் குறைக்கப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.9% மட்டுமே ராணுவச் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் இரண்டுக்கும் எதிராக நம்பகமான தடுப்பை ஏற்படுத்த இந்தியா தனது பாதுகாப்பு பட்ஜெட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 2.5% ஆக அதிகரிக்க வேண்டும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதேநேரம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணுவப் பிரிவான மக்கள் விடுதலை ராணுவம், தென் சீனக் கடலில் செயற்கை தீவுகளில் தளங்களை நிறுவியுள்ள நிலையில், சீனாவின் முதன்மையான குறிக்கோள் தைவானில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதே ஆகும் என்றும் கூறப்படுகிறது.

தைவானுக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கு 5 போர் விமானங்கள் மற்றும் ஏழு கப்பல்கள் அடங்கிய சிறிய குழுவை சீனா கடந்த வாரம் அனுப்பியது. சீனாவின் இதுபோன்ற அச்சுறுத்தல்கள் யாவுமே தைவானின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன.

அதிகரித்து வரும் சீன அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்காவின் மேம்பட்ட F-16 விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மூலம் தைவான் அதன் பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் வகையில், தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.

சூழல் இப்படி இருக்க, உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய பாதுகாப்பு செலவின நாடாக சீனா இருந்தாலும், பிற துறைகளில் கணக்கில் காட்டப்படாத செலவுகள் காரணமாக, சீனாவின் உண்மையான ராணுவச் செலவு அதிகாரப்பூர்வ எண்ணிக்கையை விட 40% அதிகமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

ராணுவச் செலவினங்களில் 7.2% வளர்ச்சி கடந்த ஆண்டைப் போலவே உள்ளது. 2025-ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி இலக்கை அரசாங்கம் 5% நிர்ணயித்துள்ளதால், இது சீனாவின் பரந்த பொருளாதார மந்தநிலையை பிரதிபலிக்கிறது.

அதிபர் ஜி ஜின்பிங் ஆட்சியின் கீழ், சீன ராணுவம் அதன் போர் தயார்நிலையை வலுப்படுத்துவதையும், ஊழலை ஒழிப்பதையும் நோக்கமாகக் கொண்ட விரிவான கட்டமைப்பு சீர்திருத்தங்களை எதிர்கொண்டு வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், இரண்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்கள் மற்றும் ஏவுகணைப் படையின் தலைவர் உட்பட பல மூத்த ராணுவத் தலைவர்களை ஜி ஜின்பிங் நீக்கியுள்ளார்.

2024ஆம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று, சீனாவின் வளர்ந்து வரும் ராணுவ நடவடிக்கைகளை பற்றி எச்சரிக்கை செய்திருந்தது. தனது எல்லைகளுக்கு அப்பால் செயல்பட சீன ராணுவம் அதன் திறன்களை விரிவுபடுத்துகிறது என்பதை கூறியிருந்தது. சீன கடற்படையின் திறந்த கடல் பயிற்சிகள் குறித்தும் அது சுட்டிக் காட்டியிருந்தது.

இதை உண்மைப்படுத்தும் வகையில், கடந்த சில வாரங்களில் ஆஸ்திரேலிய கடற்கரையில் நேரடி ராணுவ பயிற்சிகளை நடத்தியதன் மூலம் சீனா ஆஸ்திரேலியாவுடன் பதட்டத்தை அதிகரித்துள்ளது. அதன் போர்க்கப்பல்களும் ஆஸ்திரேலிய கடல்பகுதிகளில் சுற்றி வருகின்றன.

இந்த மாற்றங்கள் ராணுவத்தை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், அவை சீன ராணுவத்திற்குள் உள்ள உறுதியற்ற தன்மை பற்றிய கேள்விகளையும் எழுப்புகின்றன. சீனாவின் ராணுவ செல்வாக்கு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இது அதன் பிராந்திய போட்டியாளர்களையும் மேற்கத்திய சக்திகளையும் கவலையடைய செய்திருக்கிறது.

தங்கள் பாதுகாப்புக்கென உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் ஆயுத தயாரிப்பிலும், பாதுகாப்பு விஷயங்களிலும் முதலிடு செய்ய இருப்பது எதிர்கால சூழல் குறித்த அச்சங்களை ஏற்படுத்துவதாக சர்வதேச அரசியல் ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

`தமிழைவிட சம்ஸ்கிருதம்தான் பழைமையானது; தோல்வி பயத்தில் திமுக...' - மக்களவையில் பாஜக எம்.பி பேச்சு

தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க நாட்டைப் பிளவுபடுத்த முயற்சிப்பதாக ஜார்கண்ட் பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருக்கிறார். இன்று ம... மேலும் பார்க்க

`நான் கனடிய மக்களை ஏமாற்றவில்லை; ஒவ்வொரு நாளும்..!'- பிரிவு உபசார விழாவில் கண்கலங்கிய ஜஸ்டின் ட்ரூடோ

இந்த ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, கனடா பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ருடோ (Justin Trudeau) அறிவித்தார். அதைத் தொடர்ந்து புதிய பிரதம... மேலும் பார்க்க

அதிமுக : சட்டசபை கூட்டணி கணக்கை சொல்லும் மாநிலங்களவை `சீட்’ கணக்கு - தேமுதிக இனி?!

கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையில் தமிழ்நாட்டிலிருந்து 6 மாநிலங்களவை எம்.பி-க்கள் தேர்வாகினர். இதில் தி.மு.க-விலிருந்து வழக்கறிஞர் வில்சன், தொ.மு.ச பேரவைத் தலைவர் சண்முகம், எம்.எம் அப்துல்லா, தி.மு.க கூட்டண... மேலும் பார்க்க

``மூன்றாவது குழந்தை... பெண் என்றால் ரூ.50,000; ஆண் என்றால் பசு" - ஆந்திர எம்.பி அதிரடி அறிவிப்பு!

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு திட்டம் இந்தியளவில் குறிப்பாக தென்னிந்தியாவை அச்சுறுத்தியிருக்கிறது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டு திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்திய தென்னிந்தியாவில் குழந்தை பிறப்பு வி... மேலும் பார்க்க

`மக்கள் உரிய நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்' - தர்மேந்திர பிரதானைச் சாடிய செல்வப்பெருந்தகை

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியது. இதில், மக்களவையில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் கல்வி நிதி மறுக்கப்படுவது குறித்து கேள்வியெழ... மேலும் பார்க்க

போலி வாக்காளர் அட்டை: "எல்லா மாநிலங்களிலும் கேள்விகள் எழுகின்றன" - விவாதிக்கக் கோரும் ராகுல் காந்தி

இந்தியாவின் பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கியது. இதில் வாக்காளர் அடையாள அட்டை எண் தொடர்பான விவாதத்துக்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அழைப... மேலும் பார்க்க