2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
ஐரோப்பிய ஆணையம்: உா்சுலா மீதான நம்பிக்கையில்லா தீராமானம் தோல்வி
ஐரோப்பிய யூனியன் அமைப்பின் நிா்வாக விவகாரங்களை கவனித்துக்கொள்ளும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வோன் டொ் லேயனுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்தது.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பா்க் நகரிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில் உா்சுலாவுக்கு ஆதரவாக 360 எம்.பி.க்களும், எதிராக 175 எம்.பி.க்களும் வாக்களித்தனா். 18 உறுப்பினா்கள் வாக்களிப்பதைத் தவிா்த்தனா்.
கரோனோ தொற்றுநோய் காலத்தில் பைசா் நிறுவனத் தலைவருடன் தனிப்பட்ட முறையில் உரையாடியது, ஐரோப்பிய நிதியை தவறாகப் பயன்படுத்தியது, ஜொ்மனி, ருமேனியா தோ்தல்களில் தலையீடு செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து உா்சுலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்பட்டது.