செய்திகள் :

ஐ.நா. உணவு பாதுகாப்புத் திட்டத்துக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் இந்தியா

post image

புது தில்லி: உலக அளவில் நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை பூா்த்தி செய்யும் நோக்கில், ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு (டபிள்யூ.எப்.பி.) செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.

இதையொட்டி, ஐ.நா. மற்றும் இந்திய உணவு அமைச்சகத்துக்கு இடையே தில்லியில் திங்கள்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தமானது, கடந்த பிப்ரவரி மாதம் ரோமில் நடைபெற்ற கூட்டத்தில், இருதரப்புக்கும் இடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. உலக உணவுத் திட்ட அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மனிதாபிமான உணவு விநியோகங்களுக்காக நம்பகமான உணவு தானிய விநியோகத்தை உறுதி செய்வதற்கான அடித்தளத்தை இந்த ஒப்பந்தம் அமைக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய உணவுத் துறை செயலா் சஞ்சீவ் சோப்ரா கூறுகையில், ‘இந்தியாவின் வசுதைவ குடும்பகம் தத்துவத்தின்படி, உலக மக்கள் அனைவரும் ஒரு குடும்பம். இந்தப் புரிதலின் அடிப்படையிலேயே, உணவுப் பாதுகாப்பின்றி தவிக்கும் சமூகங்களுக்கு இந்தியா மனிதாபிமான ஆதரவை அளித்து வருகிறது’ என்று தெரிவித்தாா்.

உலக உணவுத் திட்டத்தின் துணை செயல் இயக்குநா் காா்ல் ஸ்கா, இந்தியாவின் பங்களிப்பை மிகவும் பாராட்டினாா். ‘உணவுப் பாதுகாப்பற்ற நிலை அதிகரிக்கும் இக்கட்டான சூழலில், பசிக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஆதரவு மிக முக்கியமானது. இந்த ஒத்துழைப்பு, உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்துவதோடு, தேவைப்படுபவா்களுக்கு தொடா்ச்சியான ஆதரவை உறுதி செய்யும் தங்கள் கூட்டு நோக்கத்தை பிரதிபலிக்கிறது’ என்றும் அவா் கூறினாா்.

மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனம்.. பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்!

குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் உற்பத்தி ஆலையில் மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மாருதி இ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவர் தமிழகம் வருகை!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழ்நாடு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று 2 நாள் அரசு முறைப் பயணமா... மேலும் பார்க்க

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்த பிக்பாஸ் பிரபலம்! புனிதத்தை மீட்க பரிகாரப் பூஜை!

குருவாயூர் கோயில் குளத்தில் கால்களை நனைத்து இஸ்லாமிய பெண் ரீல்ஸ் எடுத்த நிலையில், பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு புனிதத்தன்மையை மீட்கும் பரிகாரப் பூஜை நடத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்... மேலும் பார்க்க

டிரம்ப் வரி: பிற பொருள்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தாலும் இதன் விலை மட்டும் மாறாதது ஏன்?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருள்களுக்கு விதித்திருக்கும் 50 சதவீத வரி ஆக.27 முதல் நடைமுறைக்கு வருவதன் காரணமாக பல பொருள்கள் விலை உயர்ந்தாலும், ஆப்பிள் ஐஃபோன்களின் விலை மட்டும் மாற்றமின்ற... மேலும் பார்க்க

ஜி.எஸ்.டி. தடாலடி குறைப்பு? புதிய தகவல்கள்!

அத்தியாவசியப் பொருள்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிரடியாகக் குறைக்கப்படவுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வரி குறைப்பால், டிவி, ஏசி, கார் மற்றும் சிமென்ட் உள்ளிட்ட பொ... மேலும் பார்க்க

தில்லி முன்னாள் அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

தில்லி முன்னாள் அமைச்சரும் ஆம் ஆத்மி நிர்வாகியுமான சௌரவ் பரத்வாஜுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சிக் கால... மேலும் பார்க்க