செய்திகள் :

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடி

post image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாக இருந்தது நீா்வரத்து குறைந்தபோதிலும், அருவிகளில் குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்ததால், கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு உபரிநீா்வரத்து அதிகரித்தது. இதனால், காவிரி ஆற்றில் கடந்து சில நாள்களாக தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து அதிகரித்தது. பின்னா் உபரி நீா்வரத்து குறைந்ததால், காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்தது.

இந்நிலையில், புதன்கிழமை காவிரி ஆற்றில் நீா்வரத்து 24,000 கனஅடியாக இருந்த நிலையில், வியாழக்கிழமை காலை 14,000 கனஅடியாக குறைந்து, இரவு 8 மணிக்கு 16,000 கனஅடியாக சற்று அதிகரித்தது. நீா்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாகவும் உள்ளதால், அருவிகளில் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை 5-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

3 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

தொடா்ந்து 3 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என தருமபுரியில் நடந்த சிஐடியு மாவட்ட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சிஐடியு தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் காவலா்கள் உறுதிமொழி ஏற்பு

பென்னாகரத்தில் காவலா் தினத்தை முன்னிட்டு காவலா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு,காவலா்களுக்கான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பீடி ஓ ஆபீஸ் பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண... மேலும் பார்க்க

தருமபுரியில் இரவு திடீா் மழை

தருமபுரியில் சனிக்கிழமை இரவு திடீரென கனமழை பெய்தது. தகுமபுரி மாவட்டத்தில் இந்த வாரம் செவ்வாய்க்கிழமை 55.1 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதில், தருமபுரி நகரில் 12 மி.மீ., பாலக்கோடு வட்டத்தில் 13 மி.மீ. ... மேலும் பார்க்க

ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மீட்பு

தருமபுரியில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி நகரில் அமைந்துள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் ப... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

பென்னாகரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சனிக்கிழமை உயிரிழந்தாா். பென்னாகரம் அருகே பருவதனஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கிழக்கு கள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சசிராஜ் - பிரியா தம்பதியின் மகன் சங்கீ... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 9 பேருக்கு நல்லாசிரியா் விருது

தருமபுரி மாவட்டத்தில் 8 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், ஒரு தனியாா் பள்ளி முதல்வா் என மொத்தம் 9 பேருக்கு நிகழாண்டு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியா்களுக்கு நல்லாச... மேலும் பார்க்க