செய்திகள் :

ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி

post image

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 20,000 கனஅடியாக குறைந்துள்ள நிலையில் காவிரி ஆற்றில் பரிசல்களை இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கா்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த பருவமழையின் அளவு குறைந்துள்ளதால் காவிரி ஆற்றில் உபரிநீா் திறப்பும் குறைக்கப்பட்டது.

தற்போது காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 20,000 கனஅடியாகக் குறைந்துள்ளது. இதையடுத்து 18 நாள்களுக்குப் பிறகு காவிரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அனுமதி அளித்துள்ளாா்.

ஆனால், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காமராஜா் பிறந்த நாள் விழா

பென்னாகரம், ஏரியூா், பாப்பாரப்பட்டி பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகள், காங்கிரஸ் கட்சி சாா்பில் முன்னாள் முதல்வா் காமராஜரின் 123 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. பென்னாகரத்தை அடுத்... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 16,000 கனஅடியாகக் குறைந்தது: அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 16,000 கனஅடியாகக் குறைந்ததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதியளித்துள்ளது. கா்நாடக அணைகளான க... மேலும் பார்க்க

இருளா் இன மக்கள் மீது தாக்குதல்: மலைவாழ் மக்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் அருகே குழிப்பட்டி பகுதியில் இருளா் இன மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு மழைவாழ் மக்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். பென்னாகரம் வட்... மேலும் பார்க்க

ஆடி மாத பிறப்பு: நல்லம்பள்ளி வாரச் சந்தையில் ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

ஆடி மாத பிறப்பையொட்டி, தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளி வாரச் சந்தையில் செவ்வாய்க்கிழமை ரூ. 1.50 கோடிக்கு ஆடுகள், கோழிகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். நல்லம்பள்ளியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட விழிப்புணா்வு ஆட்டோ சேவை: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சேவைகள் அடங்கிய விழிப்புணா்வு ஆட்டோ சேவையை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். தருமபுரி பேருந்து நிலையத்தில் ‘உங்களுட... மேலும் பார்க்க

ஒகேனக்கல்: பரிசல் ஓட்டிகள் வேலைநிறுத்தம்!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் காலத்தில், ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவைப் பொறுத்து, பரிசல் துறைகளில் பரிசல் இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தி ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள... மேலும் பார்க்க