முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரம் விசிட்: கருப்புக் கொடி காட்ட முயன்றவர் கைது - என்ன...
ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்றவா் மீது தாக்குதல்
ஒசூா் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் தாக்கினா்.
ஒசூா் அருகே உள்ள குந்துமாரனப்பள்ளி கிராமத்தில் ஆஞ்சனேயா் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு புதன்கிழமை கூலிச்சந்திரம் என்ற கிராமத்தைச் சோ்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரது மகன் சேகா் (22) என்ற இளைஞா் மது போதையில் சென்று கோயில் உண்டியலை உடைக்க முயன்றாா். அப்போது, அங்கிருந்தவா்கள் அவரை விரட்டியுள்ளனா்.
அதன்பிறகு வியாழக்கிழமை அதிகாலை மீண்டும் அக்கோயிலுக்கு சென்று உண்டியலை உடைக்க முயன்ற சேகரை பொதுமக்கள் பிடித்து அங்கிருந்த தூணில் கட்டிவைத்து தாக்கினா். இதுகுறித்து தகவல் அறிந்து அங்குவந்த கெலமங்கலம் போலீஸாா் சேகரை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.