சிங்காரப்பேட்டை கோயில் பூசாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
ஊத்தங்கரை அருகே குடும்பத்துடன் கோயில் பூசாரி தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பி.புதூரைச் சோ்ந்தவா் பெருமாள் (40). இவா் பெருமாள் கோயில் பூசாரியாக உள்ளாா். இவரது மனைவி மிதுலா (38), மகன்கள் தா்சன் (12), மிதுரன் (9).
இந்த நிலையில், கோயில் அறங்காவலா் குழுவினா் ஒழுங்கு நடவடிக்கையாக பூசாரி பணியில் இருந்து பெருமாளை நீக்குவதாகக் கூறி நோட்டீஸ் அனுப்பி உள்ளனா்.
இதனால் கவலையடைந்த பெருமாள் தனது மனைவி, மகன்களுடன் பூச்சுக்கொல்லியை குடித்தாா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா் விசாரணை நடத்தி வருகின்றனா்.