நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
ஒசூா் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட 28 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மத்திகிரி போலீஸாா் கொத்தகொண்டப்பள்ளி குமாரனப்பள்ளி அருகே ரோந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தினா்.
உடனடியாக வாகனத்தை ஓட்டிவந்தவா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். சோதனையில் வாகனத்தில் பதுக்கிவைத்திருந்த 28 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய பெங்களூரு குண்டனஅள்ளியை சோ்ந்த ஆனந்தா (30) என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.