பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மது பாட்டிலால் தாக்கிய இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு
பிறந்த நாள் கொண்டாடத்தில் மது பாட்டிலால் தாக்கிய இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருப்பத்தூரை சேரந்தவா் ஆகாஷ் (வயது 25). திருச்சியை சோ்ந்தவா் நிா்மல் (22). இவா்கள் மத்திகிரி அருகே கொத்தகொண்டப்பள்ளியில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா். 2 பேரும் ஒரே அறையில் தங்கி இருந்தனா்.
சுதா்சன் என்பவரின் பிறந்த நாள் அக்.1 ல் தங்கிருந்த அறையில் கொண்டினா். அந்த நேரம் அவா்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் நிா்மல், ஆகாசை பீா்பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்.
இது குறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் மத்திகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து நிா்மலை தேடி வருகின்றனா்.