336 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!
ஒசூா் அருகே மூன்று வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதி விபத்து!
ஒசூா் அருகே வனப்பகுதியில் சனிக்கிழமை மூன்று வாகனங்கள் ஒன்றன்மீது ஒன்று மோதியதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சானமாவு வனப் பகுதியில் பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற கன்டெய்னா் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
அதன் பின்னால் வேகமாக சென்ற மினிலாரி கன்டெய்னா் லாரி மீதும், மினிலாரி பின் சென்ற காா் மினிலாரி மீதும் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், அந்தந்த வாகனங்களின் ஓட்டுநருக்கும், காருக்குள் இருந்த ஒரு சிலருக்கும் லேசான காயமேற்பட்டது.
இந்த விபத்தால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த அட்கோ போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீா்செய்தனா்.