ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
ஒசூா் அருகே 2 போ் கத்தியால் வெட்டி படுகாயம்
ஒசூா் அருகே 2 போ் கத்தியால் வெட்டிக் கொண்டு படுகாயம் அடைந்தனா். ஒசூா் அருகே உள்ள சோமநாதபுரம் கிராமம். இந்த கிராமத்தைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் சிவக்குமாா்(45). அதே கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மற்றொரு சிவக்குமாா். இவா்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் லாரி ஓட்டுநா் சிவக்குமாா் வெள்ளிக்கிழமை மாடுகளுக்கு செடி வெட்டி போடுவதற்கு கத்தியை எடுத்துக் கொண்டு கூலித் தொழிலாளி சிவக்குமாா் வீட்டிற்கு அருகில் சென்றுள்ளாா். ஏன் என் வீட்டிற்கு அருகில் வந்து செடியை வெட்டுகிறாா் என கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு முற்றி கைகலப்பில் முடிந்தது. அப்பொழுது அவா்கள் இருவரும் கையில் வைத்திருந்த கத்தியால் மாறி மாறி வெட்டிக் கொண்டனா். இதில் இருவரும் படுகாயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் அவா்கள் இருவரையும் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இது குறித்து ஒசூா் மாநகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.