செய்திகள் :

ஒடிசா: ரேபிஸ் தடுப்பூசி போட 20 கிமீ நடந்த 95 வயது மூதாட்டி... வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

post image

ஒடிசா மாநிலம் முழுவதும், ஓய்வூதியம், பணிப் பாதுகாப்பு, காவல்துறையால் ஓட்டுநர்கள் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் ஓட்டுநர்கள் கடந்த 8-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். அதனால், ஒடிசா மாநிலத்தின் போக்குவரத்து அமைப்பு கடுமையாக ஸ்தம்பித்தது. ஆம்புலன்ஸ்கள், பள்ளி பேருந்துகளுக்கு மட்டும் வேலைநிறுத்தத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டன.

ஒடிசா
ஒடிசா

இந்த நிலையில், ஒடிசாவின் நுபாடா மாவட்டத்தில் இருக்கும் சிகாபஹால் கிராமத்தைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி மங்கள்பரி, நாய்கடிக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டுவருகிறார். கடந்த புதன்கிழமை அவருக்கு இறுதி ரேபிஸ் தடுப்பூசி போடப்பட இருந்தது. ஓட்டுநர்களின் வேலை நிறுத்தத்தால் போக்குவரத்து வசதிகள் இல்லாததால், மங்கள்பரி மூதாட்டி சுமார் 10 கிமீ நடந்து சென்று சுகாதார மையத்தில் ரேபிஸ் தடுப்பூசி போட்டுவிட்டு, மீண்டும் 10 கிமீ நடந்து வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.

இவர் நடந்துச் சென்ற வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலானது. இது குறித்து பேசிய சினாபாலி வட்டார வளர்ச்சி அலுவலர் கர்மி ஓரம், ``இன்றைய செய்தியின் மூலம் மூதாட்டி நடந்துச் சென்ற சம்பவம் குறித்து அறிந்தேன். வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த சங்கமே இதுபோன்ற சூழ்நிலைக்கு பொறுப்பாகும். மேலும், குடும்பத்தினர் யாரிடமாவது ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து பாட்டியை தடுப்பூசி போட அழைத்துச் சென்றிருக்கலாம்" எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் துர்கா சரண் பிஷி, ``நாங்கள் போராட்டத்தைக் கவனித்து வந்தாலும், அத்தியாவசிய சேவைகள் நடப்பது குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோ அல்லது அரசு நிர்வாகமோ இந்த குறிப்பிட்ட சூழ்நிலை குறித்து எங்களுக்குத் தெரிவித்திருந்தால் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் நிச்சயமாக வழங்கியிருப்போம். இதுபோன்ற சூழ்நிலைகளைக் கையாள போதுமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு. இதற்கு சங்கத்தைக் குறை கூறுவது நியாயமற்றது" என்றார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் வெளியானதும் பலரும் மூதாட்டியின் குடும்பத்தினர் உதவிக்காக ஆம்புலன்ஸை அழைத்திருக்கலாம் எனச் சுட்டிக்காட்டினர். அதற்கு அந்தக் குடும்பத்தினர், "தடுப்பூசி போடக் கூட ஆம்புலன்ஸை அழைக்க முடியுமா? இதுபற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நாங்கள் ஒரு இரு சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்திருக்க முடியும். ஆனால், அவரால் அதில் உட்கார முடியாது" என்றனர்.

Odisha: கர்ப்பிணி பெண்ணை 10 கி.மீ தோளில் சுமந்த மக்கள்; மோசமான சாலையால் ஊருக்குள் வராத ஆம்புலன்ஸ்

ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போஜ்குதா கிராமத்தைச் சேர்ந்த சுனாய் போஜ் என்ற பெண் கர்ப்பமாக இருந்த நிலையில், நேற்று பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அருகில் உள்ள சுகாதார மையத்தில் சுனாய் பெற்றோர் உ... மேலும் பார்க்க

கேரளா: 15 அடி ராஜநாகத்தை அசால்டாக பிடித்த பெண் - யார் இந்த ஜி.எஸ் ரோஷ்னி?

கேரளா வனத்துறையைச் சேர்ந்த ஜி.எஸ்.ரோஷ்னி என்ற பெண் வனத்துறை அதிகாரி 14-15 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை அசால்டாக பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இவரது வீடியோ வைரலாவது இது முதன்முறை அல்லது. பெரிய அளவிலன... மேலும் பார்க்க

5 ஆண்டுகள்... 5 மாநிலங்கள் - `785 பேரைக் கொன்ற மனைவிகள்!' - அச்சமூட்டும் `அதிர்ச்சி' தகவல்!

சமீப நாட்களில் நாம் கடந்து வரும் செய்திகள் திருமண செயல்பாடுகள் மீதே பல்வேறு கேள்விகளை எழச் செய்துள்ளன. வரதட்சணைக் கொடுமை, குடும்ப வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.திருமணம் தாண்டிய உறவு, ஏமாற்... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைதான மல்ஹோத்ரா; கேரள சுற்றுலாதுறை திட்டத்தில் பங்கேற்றது எப்படி?

ஹரியானாவைச் சேர்ந்த 33 வயது பயண வலைபதிவர் ஜோதி மல்வோத்ரா (Jyoti Malhotra) பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தகவல்கள் வழங்கியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வெளியான தகவலின்படி, பாகிஸ்தான் உளவாள... மேலும் பார்க்க

SF90: பெங்களூரில் வலம் வந்த ரூ7.5 கோடி மதிப்பிலான ஃபெராரி; ரூ1.41 கோடி அபராதம் விதித்த காவல்துறை!

ஃபெராரி இத்தாலியைச் சேர்ந்த ஒரு ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனம். ரேஸ் கார்கள் தவிர, SF90 Stradale, SF90 ஸ்பைடர், என்ஸோ ஃபெராரி என்று பல சூப்பர் கார்களை விற்றுக் கொண்டிருக்கிறது ஃபெராரி. சமீபகாலமாக கர்நாடக... மேலும் பார்க்க

Custodial Death: ``நானும் அம்மாவும் அழுதுகொண்டே இருக்கிறோம்" - முனைவர் நிகிதா வெளியிட்ட ஆடியோ!

தமிழகத்தை உலுக்கிக்கொண்டிருக்கும் அஜித் குமார் மரணம் தொடர்பான பரபரப்பு தகவல்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நீதிமன்றம் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது. இதற்கிடையில், அஜித்குமார் மீது காவல் நிலைய... மேலும் பார்க்க