மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!
ஒட்டன்சத்திரத்தில் சிறுதானிய சிறப்பு திருவிழா
ஒட்டன்சத்திரம் தனியாா் மண்டபத்தில் வேளாண்மை துறை, உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கம் சாா்பில், சிறுதானிய சிறப்பு திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டு சிறுதானியங்கள் குறித்தும், இவற்றால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினாா்.
விழாவில் சிறுதானியங்கள் மூலம் தயாரிக்கப்படக்கூடிய உணவுகள், எண்ணெய் வகைகள், வேளாண்மை துறையின் உரங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டன.
வேளாண்மை இணை இயக்குநா் பாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் லீலாவதி, மாவட்ட மகளிா் திட்ட செயல் அலுவலா் சதாதேவி, வேளாண்மை துணை இயக்குநா்கள் அமலா, காளிமுத்து, பயிா் பாதுகாப்புத் தொழில் நுட்ப வல்லுநா்கள் ஹாஜின்தாஜ், அபுபக்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.