செய்திகள் :

'ஒருவர் வளைந்து கொடுத்தே பழகி விட்டார்; மற்றொருவர் சாட்டையால் அடித்துக்கொள்கிறார்' - கனிமொழி சாடல்

post image
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தெற்கு மாவட்டக் கழகம் சார்பில் திராவிட மாடல் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் எம்பி கனிமொழி கலந்துகொண்டார். அந்த நிகழ்வில் பேசிய கனிமொழி, “ திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்குமானது. அதனை உடைக்கவேண்டும் என நினைப்பவர்களே நமக்கு எதிராக நிற்கிறார்கள். பெரியார் மக்களுக்காகப் போராடி எத்தனை முறை சிறை சென்றாலும் ஒரு முறைகூட  நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்காதவர். தண்டனையைத் தாருங்கள் ஆனால் நான் செய்தது தவறல்ல என கர்ஜித்தவர் பெரியார். பணம் தந்தாலும் தராவிட்டாலும் தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையில் கையெழுத்து போடாது எனக் கூறியவர் தமிழக முதல்வர்.

கனிமொழி
கனிமொழி

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நிகரான தகுதியான பெயர் சொல்லக் கூடிய தலைவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை. மாறாக தமிழ்... தமிழ்... எனக் கூறிக்கொண்டு தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடிய சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்யவேண்டிய சூழல் இங்குள்ளது. தமிழகத்திற்கு பொழுதுபோக்கிற்காக ஒரு ஆளுநர் இருந்து வருகிறார். அவர் ஆளுநராக இல்லை அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.

மக்களுக்குத் தேவையான திட்டங்களை செய்வதற்கு எந்தவித நிதியையும் ஒன்றிய அரசு கொடுப்பதில்லை. தமிழ் மொழிக்கும் தமிழக மக்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவுகின்ற கட்சியினரை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழலில் திமுக உள்ளது என்றார்.

கனிமொழி
கனிமொழி

தொடர்ந்து பேசிய அவர், “ ஒருவர் ஒன்றிய அரசிடம் வளைந்து கொடுத்தே தன்னுடைய நிலையை தக்க வைத்துக்கொண்டார். ஒருவர் நம் நாட்டு மக்களுக்காக சாட்டையால் அடித்துக்கொள்கிறேன் என்கிறார். சில நேரங்களில் நம் தளபதியை( ஸ்டாலின்)  நினைத்து வருத்தப்படுவேன். பேர் சொல்லக்கூடிய எதிரி கூட அவருக்கு இல்லாமல் போய்விட்டதே என்று” என கனிமொழி கூறியிருக்கிறார்.   

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

TVK : `ஒன்றிய அரசுடன் ஒரே நேர்கோட்டில் தமிழக ஆட்சியாளர்கள்..!" - சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி விஜய்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், மாநில அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனக் கூறி இருக்கிறார். சமீபத்தில் தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பெற்று அதுகுறித்த... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி: `பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம்; மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்' - அதிமுக அறிவிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தை உலுக்கியிருக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அரசு நடுநிலைப் பள்ளிய... மேலும் பார்க்க

`கைவிலங்கிட்ட அமெரிக்கா, வாய் திறக்காத இந்தியா' - கொதிக்கும் எதிர்க்கட்சிகள்; நாடாளுமன்றத்தில் அமளி!

அமெரிக்காவில் சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய இந்தியர்களைப் பஞ்சாப் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் கொண்டுவந்து சேர்த்தது, சி17 அமெரிக்க ராணுவ விமானம்.இதில் 104 இந்தியர்கள் வந்திறங்கி... மேலும் பார்க்க

கழுகார்: தலையில் அடித்துக்கொண்ட ‘ஜோதி’ அமைச்சர் `டு' கிராக்கி காட்டும் சமூகத் தலைகள் வரை..!

தலையில் அடித்துக்கொண்ட ‘ஜோதி’ அமைச்சர்!”“உத்தரவு போட்ட ‘ஷாக்’ அமைச்சர்...தமிழ்மொழியைப் பெருமைப்படுத்தும் விதமாக, ‘மான்செஸ்டர்’ மாவட்டத்தில் பிரமாண்ட பூங்கா ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகளைச்... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: மக்கள் அச்சத்தை கவனப்படுத்திய விகடன்; கிணற்றைச் சுற்றி அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர்!

திருப்பத்தூர் மாவட்டம், குட்டிகாம்ப வட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ரெட்டியூரில் கிராம சாலையையொட்டி அமைந்திருக்கிறது அந்தக் கிணறு. பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் நடந்தும், சைக்கிளிலும், வாகனங்களிலும் செல்... மேலும் பார்க்க