செய்திகள் :

ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர சிகிச்சை.. மக்களைச் சந்திக்கிறார் போப்!

post image

ரோம் : போப் பிரான்சிஸ் ஒரு மாதத்துக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நாளை(மார்ச் 23) மக்களைச் சந்திக்கவிருக்கிறார்.

கடைசியாக, கடந்த மாதம் 14-ஆம் தேதி போப் பிரான்சிஸ் பொதுவெளியில் மக்களைச் சந்தித்து உரையாடினார். அதன்பின், உடல்நலக் குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போப் பிரான்சிஸ்(88) மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பிப். 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு ஆண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

போப் பிரான்சிஸ் இயற்கையாக சுவாசிக்க சிரமப்படுவது தொடருவதால், மூக்கின் வழியே குழாய் பொருத்தப்பட்டு அவருக்கு தேவையான ஆக்ஸிஜன் குழாய் மூலம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இரவில் வெண்டிலேட்டர் உதவியுடன் அவர் சுவாசித்து வருவதாகவும் வாடிகன் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இந்த நிலையில், இப்போதைய நிலவரப்படி, போப் பிரான்சிஸ் இரவில் வெண்டிலேட்டர் உதவியில்லாமல் மூச்சு விடுவதாகவும், நன்றாக தூங்கி ஓய்வெடுப்பதால் அவர் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெமெலி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ள அறையிலிருந்தபடி, ஜன்னல் வழியாக அவர் மக்களைச் சந்திப்பார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, போப் பிரான்சிஸ் உடல்நலம் பெற வேண்டி பல இடங்களிலும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மேற்கண்ட செய்தி உலகெங்கிலுமுள்ள ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 மாதங்களில் 1.5 லட்சம் பேருக்கு காலரா! எங்கு தெரியுமா?

கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவில் ஒரு லட்சம் பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது. மேலும் பார்க்க

இசை கேட்டு வளர்ந்த கோழிக்கறி உணவு! விலை ரூ. 5,500

சமைத்த கோழிக்கறி உணவுக்கு தொழிலதிபர் ஒருவர் ரூ. 5500 பணம் செலுத்தியுள்ளார். இது குறித்து அந்த உணவகத்திடம் கேட்டபோது அவர்கள் அளித்த பதில், பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, அந்தக் கோழிக்கு நீர... மேலும் பார்க்க

அமெரிக்காவால் எதுவும் சாத்தியமே! -கிரீன்லாந்து குறித்து துணை அதிபர் வான்ஸ்

கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவது சாத்தியமே என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க துணை அதிபர் ஜே. டி. வான்ஸ். இவ்விவகாரம் குறித்து ஜே.டி. வான்ஸ் அளித்துள்ள பேட்டியொன்றில், “கிரீன்லாந்தை அமெரிக்கா விலை... மேலும் பார்க்க

ஆசியாவில் வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு பாகிஸ்தானா?

தெற்காசிய நாடுகளில், வாழ்வதற்கு அதிகம் செலவாகும் நாடு என்ற பட்டியலில் பாகிஸ்தான் ஏற்கனவே முதலிடத்தைப் பிடித்திருந்த நிலையில், கடுமையான பணவீக்கம் காரணமாக தற்போது ஆசிய நாடுகளிலேயே வாழ்வதற்கு அதிகம் செலவ... மேலும் பார்க்க

கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!

கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்று இருக்கும் மார்க் கார்னி, முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த உத்தரவிட்டுள்ளார்.வருகின்ற அக்டோபர் மாதம் வரை பதவிக் காலம் இருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தை முன்கூட்டியே... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!

காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண... மேலும் பார்க்க