செய்திகள் :

Dhoni: "தோனிக்காக விட்டுக்கொடுப்பேன் என ரசிகர்கள் நம்பினர்; ஆனா..." - வின்னிங் ஷாட் குறித்து ரச்சின்

post image

ஐ.பி.எல் 18-வது சீசனின் மூன்றாவது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

ருத்துராஜ் தலைமையிலான சென்னை அணியும், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணியும் மோதிக்கொண்ட இந்த ஆட்டத்தில், 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது.

சென்னை அணியில் நூர் அகமது அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல், பேட்டிங்கில் ரச்சின் ரவீந்திரா ஓப்பனிங்கில் இறங்கி ருத்துராஜுடன் அரைசத பார்ட்னர்ஷிப் அமைத்து இறுதியில் தோனியை நான்-ஸ்ட்ரைக்கரில் நிற்க வைத்து வின்னிங் ஷாட் சிக்ஸுடன் ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார்.

ரச்சின் ரவீந்திரா
ரச்சின் ரவீந்திரா

கடந்த சீசனில் சென்னை அணி மூலம் ஐ.பி.எல்-இல் அறிமுகமாகிய ரச்சின் ரவீந்திரா, பேட்டிங்கில் தோனியுடன் களத்தில் நின்றது இதுவே முதல்முறை.

வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தோனியுடனான மொமென்ட் குறித்துப் பேசிய ரச்சின் ரவீந்திரா, ``அணிக்காகப் போட்டியை வெல்வதில் கவனமாக இருக்கும்போது, அந்த மொமென்ட்டை முழுமையாக எடுத்துக்கொள்வது கடினம்.

அதே சமயம், அந்த உற்சாகம், தோனிக்கான ஆரவாரம், விசில் போன்றவற்றைப் புறக்கணிப்பதும் கடினம்.

கிரீஸில் முதல்முறையாக அவருடன் நின்றதை என்னாலேயே நம்ப முடியவில்லை. அவர் ஒரு லெஜண்ட். மக்கள் அவரை நேசிக்கிறார்கள்.

எனவே இது மிகவும் ஸ்பெஷலானது. இந்த ஆட்டத்தை அவர் முடித்துக் கொடுக்க நான் விடுவேன் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால், இங்கு எல்லாமே ஆட்டத்தை முடித்துக் கொடுப்பது மட்டும்தான்.

சென்னை அணிக்காக நிறையப் போட்டிகளை தோனி முடித்துக் கொடுத்திருக்கிறார். அந்த வரிசையில் இன்னும் நிறையப் போட்டிகள் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று கூறினார்.

Dhoni
Dhoni

அதைத்தொடர்ந்து, ருத்துராஜுடனான பார்ட்னர்ஷிப் குறித்துப் பேசிய ரச்சின் ரவீந்திரா, ``ருத்துராஜ் அற்புதமான வீரர். தனது திறமையை அவர் வெளிப்படுத்திய விதமும், அழகான ஷாட்களை அடித்து ரன்கள் சேர்த்த விதமும் சுவாரஸ்யமாக இருந்து.

மும்பை அணி நன்றாகப் பந்துவீசியது. இருப்பினும், ருத்துராஜ் ஆடிய விதம் அவரின் க்ளாஸ் பேட்டிங்குக்கு சான்று. அது என்னுடைய வேலையை எளிதாக்கியது" என்று தெரிவித்தார்.

சென்னை தனது இரண்டாவது போட்டியில், ரஜத் பட்டிதார் தலைமையிலான பெங்களூரு அணியைச் சேப்பாக்கத்தில் மார்ச் 28-ம் தேதி எதிர்கொள்கிறது.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Sanjiv Goenka: `ஏமாற்றம்தான், பரவாயில்லை' - தோல்விக்குப் பின் வீரர்களிடம் LSG ஓனர் சஞ்சீவ் கோயங்கா

ஐபிஎல் பார்ப்பவர்களுக்கு சஞ்சீவ் கோயங்கா யார் என்று நிச்சயம் ஓரளவுக்காவது தெரிந்திருக்கும். 2016, 2017-ல் விளையாடிய ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் சஞ்சீவ் கோயங்கா.இவர், 2... மேலும் பார்க்க

LSG: லக்னோவுக்கு கேப்டன் ஆனாலே டக் அவுட் ஆவார்களா... அன்று கே.எல்.ராகுல் இன்று ரிஷப் பன்ட்!

ஐபிஎல்லில் கடந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வியடைந்ததையடுத்து, லக்னோ கேப்டன் கே.எல்.ராகுலிடம் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே ஆக்ரோஷமாகப் பேசும் வீடியோ... மேலும் பார்க்க

ஸ்ரேயாஷ் ஐயர்: பஞ்சாப் அணியின் புது வரலாற்றை எழுதப்போகும் ஸ்ரேயாஷ்; எப்படித் தெரியுமா?

பஞ்சாப் அணி இந்த சீசனை வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. 11 ரன்கள் வித்தியாசத்திலான வெற்றிதான். பொதுவாகப் பார்த்தால் அத்தனை முக்கியமான வெற்றியெல்லாம் இல்லை. இன்னும் சீசன் இருக்கிறது. இன்னும் போட்டிகள் இர... மேலும் பார்க்க

'கோலியும், நானும் இப்போ கேப்டன் இல்ல, அதனால...' - விராட் கோலி குறித்து தோனி ஷேரிங்ஸ்

ஐபிஎல் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோனி ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்டி ஒன்றில் விராட் கோலி குறித்து பகிர்ந்திருக்கிறார். தோனி"விராட் கோலியை பொறுத்தவரை அவர... மேலும் பார்க்க

DRS எடுக்காததால் பறிபோன வாய்ப்பு... இரண்டே நாளில் ரோஹித்தை முந்தி மோசமான சாதனை படைத்த மேக்ஸ்வெல்

ஐபிஎல் நேற்றைய (மார்ச் 25) போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணியும் அகமதாபாத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செ... மேலும் பார்க்க

Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ஸ்ரேயாஸ் ஐயர்

பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான போட்டியில் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. பஞ்சாப் அணி சார்பில் டெத் ஓவரில் வைஷாக் விஜயகுமார், மார்கோ யான்சென், அர்ஷ்தீப் குமார் ஆகியோர... மேலும் பார்க்க