திருப்பூரில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் பிறந்த வீடு!
ஓசூர் மாநாட்டில் 92 ஒப்பந்தங்கள் மூலம் 49,353 வேலைவாய்ப்பு!
ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.,
முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று (செப். 11) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ஓசூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், ரூ. 23,303.15 கோடி முதலீட்டில், 44,870 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 53 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் ரூ. 1003.85 கோடி முதலீட்டில் 4,483 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில், 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆக மொத்தம், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், முதல்வர் ஸ்டாலின் 250 கோடி ரூபாய் முதலீட்டில் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 3 முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைத்து, 1210 கோடி ரூபாய் முதலீட்டில் 7900 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
அத்துடன், நான்கு நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டங்களின் விவரங்கள்
முதல்வர் ஸ்டாலின் இன்றைய நாள் ரூ. 250 கோடி முதலீட்டில் 1,100 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் வகையில் 3 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களின் விவரங்கள்
முதல்வர் ஸ்டாலின் இன்றைய நாள் ரூ. 1,210 கோடி முதலீட்டில் 7,900 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் வகையில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதையும் படிக்க: தமிழக முன்னேற்றத்துக்காக உழைக்கும் முதல்வர் ஸ்டாலின்: டிஆர்பி ராஜா