செய்திகள் :

ஓடும் ஆம்புலன்ஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை - பிகாரில் அதிா்ச்சி சம்பவம்

post image

பிகாரில் ஊா்க்காவல் படை ஆள்தோ்வின்போது மயங்கி விழுந்த இளம்பெண் ஒருவா், ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

பிகாா் மாநிலம், கயாஜியில் மாநில அரசு சாா்பில் ஊா்க்காவல் படைக்கான உடல்தகுதித் தோ்வு கடந்த ஜூலை 24-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பங்கேற்ற 19 வயது இளம்பெண் ஒருவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, தனியாா் ஆம்புலன்ஸ் மூலம் அவா் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அரைமயக்கத்தில் இருந்த அந்தப் பெண்ணை ஆம்புலன்ஸ் ஊழியா்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. மயக்கம் தெளிந்ததும், தனக்கு நோ்ந்த கொடூரம் குறித்து காவல் துறையினா் அவா் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், பாரதிய நியாய சம்ஹிதா பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், ஆம்புலன்ஸின் ஓட்டுநா், தொழில்நுட்பப் பணியாளா் ஆகிய இருவரை கைது செய்தனா். தன்னை 4 போ் வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக இளம்பெண் கூறியுள்ளாா். சந்தேகத்தின்பேரில் மேலும் இருவரை பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மருத்துவ அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தேஜஸ்வி வலியுறுத்தல்: ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், ‘பெண் குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டுமெனில், நிதீஷ் குமாா் ஆட்சி அகற்றப்பட வேண்டும். ராட்சதா்களின் கையில் இருந்து பிகாரை விடுவிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

பிகாரில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துவிட்டதற்கு கயாஜி சம்பவமே சாட்சி என்று மாநில காங்கிரஸ் தலைவா் ராஜேஷ் குமாா் சாடினாா்.

சுபான்ஷு சுக்லா சாதனையால் விண்வெளி ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி

சுபான்ஷு சுக்லா சாதனையால் விண்வெளி ஆராய்ச்சியில் குழந்தைகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.மன் கி பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 124-ஆவது பதிப்பில... மேலும் பார்க்க

தமிழ்நாட்டுக்கு 3 மடங்கு அதிக நிதி: பிரதமர் ஏன் புரிதலின்றி பேசுகிறார்? -ப.சிதம்பரம்

தமிழ்நாட்டுக்கு மத்திய அரசால் 3 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பது சரியான தகவலே! ஆனாலும், ஒன்றை அவர் உணரவில்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெர... மேலும் பார்க்க

அப்துல் கலாம் நினைவு நாள்: பிரதமா் மோடி புகழஞ்சலி

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவு நாளில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "நமது அன்புக்குரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக... மேலும் பார்க்க

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியரைத் தாக்கிய புலியால் பரபரப்பு !

திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் ஊழியர் ஒருவரை புலி தாக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் புலி கூண்டில் உள்ள குடிநீரை அதன் மேற்பார்வையாளர் ராமச்சந்திரன் ஞாயிற்ற... மேலும் பார்க்க

நொய்டாவில் சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலி: 2 பேர் காயம்

நொய்டாவில் வேகமாக வந்த சொகுசு கார் மோதியதில் 5 வயது சிறுமி பலியான நிகழ்வு சோகத்தை ஏற்பத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் சனிக்கிழமை இரவு வேகமாக வந்த சொகுசு கார், இருசக்கர வாகனம் மீது மோதி... மேலும் பார்க்க

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட், சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய வெவ்வேறு என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து உளவுத் துறையின... மேலும் பார்க்க