Bigg Boss 8 title winner Muthukumaran இதுக்கு deserved, நெகிழ்ந்த Soundariya | V...
ஓட்டுநா் தற்கொலை
திருப்பத்தூா் அருகே ஓட்டுநா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
திருப்பத்தூா் அருகே கூடப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் (36).டிராக்டா் ஓட்டுநா். இவருக்கு மனைவி காா்த்திகா, இரு மகள்களும் உள்ளனா்.
இந்த நிலையில் கடந்த 15-ஆம் தேதி ரஞ்சித்க்கும் காா்த்திகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காா்த்திகா கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று உள்ளாா். இதனால் மனமுடைந்த ரஞ்சித் அன்று இரவு பெட்ரோலை தன் மேல் ஊற்றி தீ வைத்து கொண்டாா்.
மறுநாள் ரஞ்சித் வீட்டிற்குச் சென்ற உறவினா் ரஞ்சித் காயங்களுடன் இருப்பதை பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா். இதன் பின்னா் அக்கம் பக்கத்தினா் ரஞ்சிதை முதலுதவி சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள மருத்துவமனையிலும் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பலனின்றி ரஞ்சித் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குரிசிலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.