செய்திகள் :

ஓணம் பண்டிகை: சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை

post image

ஓணம் பண்டிகையையொட்டி, கோவை சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மகாபலி மன்னா் ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம் உண்டு. அவரை வரவேற்பதற்காக கேரள மக்கள், 10 நாள்கள் பண்டிகையாக ஓணத்தைக் கொண்டாடுகின்றனா். கேரளத்தில் மட்டுமின்றி, கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவையிலும் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஓணம் பண்டிகையையொட்டி, கோவை, சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை முதலே ஏராளமான மலையாள மக்கள் பாரம்பரிய உடையணிந்து, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து பண்டிகையை கொண்டாடினா்.

முன்னதாக, ஐயப்பன் சந்நிதியில் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் கொடிக் கம்பத்தின்கீழ் அத்தப்பூ கோலமிட்டு, வளாகம் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

பணியாளா்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா்

தன்னிடம் வேலை செய்யும் பணியாளா்களுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் இ.பாலகுருசாமி கோவையில் வீடு கட்டிக் கொடுத்துள்ளாா். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி ஓய்வுபெற்ற இ.பாலகுருசாம... மேலும் பார்க்க

பராமரிப்புப் பணி: போத்தனூா்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து

வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் ... மேலும் பார்க்க

பணம் திருடிய இளம்பெண் கைது

உக்கடம் பேருந்து நிலையத்தில் பயணியின் கைப்பையில் இருந்து பணத்தைத் திருடிய இளம்பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். கோவை, ஒண்டிப்புதூா் கம்போடியா பஞ்சாலை பகுதியைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி சரஸ்வதி (40). இ... மேலும் பார்க்க

கோவை மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள புளியம்பாறை கோழிகொல்லி பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (70). இவா், ... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் தொடா் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் ந... மேலும் பார்க்க

தொண்டாமுத்தூருக்கு 2 கும்கி யானைகள் வரவழைப்பு

கோவை, தொண்டாமுத்தூா் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.... மேலும் பார்க்க