அமெரிக்க வரி விவகாரம்: "ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்குவோம்" - நிர்மலா...
பராமரிப்புப் பணி: போத்தனூா்-மேட்டுப்பாளையம் மெமு ரயில் ரத்து
வடகோவை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் போத்தனூரில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) காலை 9.40 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66612) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து செப்டம்பா் 7-ஆம் தேதி பகல் 1.05 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம் - போத்தனூா் மெமு ரயில் (எண்: 66615) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.