தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
ஓணம் பண்டிகை: சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை
ஓணம் பண்டிகையையொட்டி, கோவை சித்தாபுதூா் ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மகாபலி மன்னா் ஓணம் திருநாளில் பூவுலகுக்கு வருவதாக ஐதீகம் உண்டு. அவரை வரவேற்பதற்காக கேரள மக்கள், 10 நாள்கள் பண்டிகையாக ஓணத்தைக் கொண்டாடுகின்றனா். கேரளத்தில் மட்டுமின்றி, கேரள மக்கள் அதிகம் வசிக்கும் கோவையிலும் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
ஓணம் பண்டிகையையொட்டி, கோவை, சித்தாப்புதூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை முதலே ஏராளமான மலையாள மக்கள் பாரம்பரிய உடையணிந்து, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்து பண்டிகையை கொண்டாடினா்.
முன்னதாக, ஐயப்பன் சந்நிதியில் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் கொடிக் கம்பத்தின்கீழ் அத்தப்பூ கோலமிட்டு, வளாகம் முழுவதும் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.