தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
கோவை மத்திய சிறைக் கைதி உயிரிழப்பு
போக்ஸோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள புளியம்பாறை கோழிகொல்லி பகுதியைச் சோ்ந்தவா் விஜயன் (70). இவா், கடந்த 2022-ஆம் ஆண்டு போக்ஸோ வழக்கில் கைதாகி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.
இந்நிலையில், அவருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரை சிறைக் காவலா்கள் கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் ஆய்வாளா் கந்தசாமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.