தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் தொடா் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளிக்கிழமையும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இது குறித்து ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், வெடிகுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவினா் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
ஆனால், அங்கு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்ட வெடிகுடுண்டு செயலிழப்பு தடுப்பு பிரிவினா்.
