செஸ் விளையாட பிடிக்கவில்லை..! குகேஷிடம் மீண்டும் தோற்ற பிறகு கார்ல்சென் பேட்டி!
ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கம் தொடக்கம்
தூத்துக்குடியில், ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசார இயக்கம் மற்றும் திமுக உறுப்பினா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட போல்பேட்டை மேற்கு பகுதியில், ஓரணியில் தமிழ்நாடு பிரசார இயக்கத்தையும், திமுக உறுப்பினா் சோ்க்கையையும் திமுக துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி தொடங்கிவைத்து, வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து திமுகவில் இணையுமாறு அழைப்பு விடுத்தாா்.
அப்போது, வடக்கு மாவட்ட திமுக செயலரும், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ., தூத்துக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பாா்வையாளரும், மாநில இளைஞரணி துணைச் செயலருமான இன்பா ரகு, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் அபிராமிநாதன், மாநகர அணி அமைப்பாளா்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தா் உள்பட பலா் உடனிருந்தனா்.