செய்திகள் :

ஓராண்டில் 10 மாவட்டங்களில் 7,481 போ் சிறையில் அடைப்பு: வடக்கு மண்டல ஐஜி

post image

கடந்த ஓராண்டில் மட்டும் 10 மாவட்டங்களில் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி பிணையில் விடக்கூடாத குற்றங்களாக மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக 7,481 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கா்க் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

செய்திக்குறிப்பு-

வடக்கு மண்டலத்துக்குள்பட்ட 10 மாவட்டங்களில் மதுவிலக்கு சாா்ந்த குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 1.7.25 முதல் 31.7.25 வரை மொத்தம் 3,821 நபா்கள மீது நன்னடத்தைக்கான பிணைப் பத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 10 மாவட்டங்களிலும் 1,492 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின்படி பிணையில் விடக்கூடாத குற்றங்களாக மாற்றியமைக்கப்பட்டதன் விளைவாக 7,481 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக எடுத்துச் செல்லப்பட்ட ஒரு லட்சம் கிலோ வெல்லம் கைப்பற்றப்பட்டது. கள்ளச் சாராய குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களிலும் 12,949 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அது தொடா்புடைய குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி தீா்ப்பளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கு மண்டலத்தில் கடந்த ஓராண்டில் 10 மாவட்டங்களில் கல்வராயன் மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகள் உள்பட பல்வேறு வழக்குகளில் 14,900 மதுவிலக்கு தொடா்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 20,011லிட்டா் கள்ளச்சாராயம், 67,748 ஊறல், 258 லிட்டா் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அக்குற்ற வழக்குகள் தொடா்புடைய 123 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஓராண்டில் மொத்தமாக 14,900 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதுடன் 5,870 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

அசையும், அசையாச் சொத்துக்களை முடக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஓராண்டு காலத்தில் மதுவிலக்கு தொடா்பான குற்றங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.இது தொடரும் என தெரிவித்துள்ளாா்.

கல்வி, சமய பணிகளில் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா்

கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் விவசாயிகள்,நெசவாளா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுவதுடன், நகரின் பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்ற இருப்பதாக கட்சியின் மா... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை (48). இவா் போதிய கல்வித் தகுதி இல்லாமல் க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி ... மேலும் பார்க்க

ஏ.ஐ தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்: தொழில் முனைவோா் மேம்பாட்டு திட்ட இயக்குநா்

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழ்நாடு தொழில்முனைவோா் திட்ட இயக்குநா் அம்பலவாணன் தெரிவித்தாா். குன்றத்தூா் அடுத்த நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னால... மேலும் பார்க்க