Sriram Krishnan: SRM மாணவர், யூடியூபர், மஸ்கின் நண்பர்... ட்ரம்பின் ஆலோசகர் - யா...
ஓராண்டில் 10 லட்சம் பேருக்கு அரசு வேலை: பிரதமர் மோடி!
புது தில்லி: கடந்த ஒன்றை ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலைகளைத் தனது அரசு வழங்கியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
ரோச்கர் மோளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி கூறியதாவது,
இந்த நிகழ்ச்சியில் சுமார் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நிரந்தர வேலைக்கான நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு சாதனை என்றார்.
இதற்கு முன்னதாக எந்த அரசும் இளைஞர்களுக்கு இந்தளவில் அரசு வேலைகளை வழங்கியதில்லை.
மத்திய அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஆள்சேர்ப்பு செயல்முறை நடத்தப்படுகிறது.
பணியமர்த்தப்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் என்று குறிப்பிடட அவர், அவர்கள் அனைத்து துறைகளிலும் சுயச்சார்புகளாக மாறுவதுதான் தனது அரசின் முயச்சி.
பெண்களுக்கு 26 வார மகப்பேறு விடுப்பு வழங்குவதற்கான அரசின் முடிவு அவர்களின் தொழில் வாழ்க்கைக்குப் பெரிதும் உதவியுள்ளது.