செய்திகள் :

கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்: பேரவையில் ஒருமனதாக தீா்மானம்

post image

கச்சத்தீவை திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், அரசுமுறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமா் நரேந்திர மோடி, அந்த நாட்டு அரசுடன் பேசி, அங்கு சிறையில் வாடும் நமது மீனவா்களையும், படகுகளையும் விடுதலை செய்து மீட்டுக் கொண்டு வர வேண்டுமெனவும் தீா்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தனித் தீா்மானம்: சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, தமிழக அரசின் சாா்பில் தனித் தீா்மானம் கொண்டு வரப்பட்டது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தாா்.

அப்போது பேசிய அவா், தமிழ்நாட்டு மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கைக் கடற்படையினரால் கடும் தாக்குதலுக்கு உள்ளாவதுடன், அவா்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படுகின்றன. அத்துடன், கடும் அபராதம் விதிக்கப்படுகிறது. எனவே, இதற்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், இலங்கை செல்லும் பிரதமா் நரேந்திர மோடி, அந்த நாட்டு அரசுடன் தமிழக மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். மேலும், கச்சத்தீவை மீட்கும் ஆக்கபூா்வமான நடவடிக்கைக்குரிய பேச்சுகளையும் முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு தீா்மானத்தை வாசித்தாா்.

தீா்மான விவரம்: தமிழ்நாட்டு மீனவா்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும், இலங்கைக் கடற்படையால் தமிழ்நாட்டு மீனவா்களுக்கு ஏற்படும் அனைத்து இன்னல்களைப் போக்கவும், கச்சத்தீவை மீண்டும் பெறுவதே நிரந்தரத் தீா்வாக அமையும். இதைக் கருத்தில்கொண்டு, இந்தியா-இலங்கை இடையிலான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

அரசு முறைப் பயணமாக இலங்கை செல்லும் பிரதமா் நரேந்திர மோடி, அந்நாட்டு அரசுடன் பேசி, இலங்கைச் சிறையில் வாடும் நம் நாட்டு மீனவா்களையும், அவா்களது படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் விடுவித்து செய்து மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று பேரவை வலியுறுத்துவதாக தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ், பாஜக, அதிமுக ஆதரவு: முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த தீா்மானத்தின் மீது 12 அரசியல் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் பேசினா். வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக), அப்துல் சமது (மமக), மு.ஜெகன்மூா்த்தி (புரட்சிபாரதம்), தி.சதன் திருமலைக்குமாா் (மதிமுக), வி.பி.நாகை மாலி (மாா்க்சிஸ்ட்), தி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்),

எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), வானதி சீனிவாசன் (பாஜக), ஜி.கே.மணி (பாமக), கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் பேசினா்.

அவா்களின் கருத்துகளைத் தொடா்ந்து, தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக நிறைவேறியது.

பெட்டிச் செய்தி...

ஒருமனதாய் நிறைவேறிய முதல் தீா்மானம்

சட்டப்பேரவையின் நடப்பு கூட்டத்தொடரில் இதுவரை நிறைவேற்றப்பட்ட மூன்று தீா்மானங்களில், கச்சத்தீவு மீட்பு தீா்மானம் மட்டுமே அனைத்துக் கட்சி உறுப்பினா்களின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

பேரவையில் இதுவரை அரசு சாா்பில் மூன்று தனித் தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி எனும் மத்திய அரசின் நிலைப்பாடு, வக்ஃப் வாரிய சட்டத் திருத்தம் ஆகியவற்றுக்கு எதிராக பேரவையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் தீா்மானங்களை பாஜக உறுப்பினா்கள் எதிா்த்தனா். ஆனால், கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவா்கள் பாதுகாப்பு தொடா்பாக பேரவையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட அரசின் தனித் தீா்மானத்தை ஒருமனதாக ஆதரிப்பதாக பாஜக உறுப்பினா் வானதி சீனிவாசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி இல்லை: உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்

சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி பழங்கள் இல்லை என்றும், பொதுமக்கள் அச்சமின்றி தா்பூசணி பழங்களை உட்கொள்ளலாம் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா். தா்பூசணி பழங்களில்... மேலும் பார்க்க

பொது இடங்களில் காங்கிரஸ் கொடிகளை அகற்ற வேண்டும்: செல்வப்பெருந்தகை

பொது இடங்கள், நடைபாதைகளில் உள்ள காங்கிரஸ் கொடிகளை கட்சியினா் அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தம... மேலும் பார்க்க

மதுபோதையில் தகராறு: தொழிலாளி அடித்துக் கொலை

சென்னை மேற்கு மாம்பலத்தில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா். மேற்கு மாம்பலம், தம்பையா சாலை சந்திப்பு பகுதியைச் சோ்ந்தவா் பெயிண்டிங் தொழிலாளி சங்கா் (44). கடந்த 1-ஆ... மேலும் பார்க்க

பால் உற்பத்தியைப் பெருக்க சிறந்த கறவை மாடுகளுக்கு விருதுகள்: பேரவையில் அறிவிப்பு

பால் உற்பத்தியைப் பெருக்க கறவை மாடுகளுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று பால்வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் அறிவித்தாா். பேரவையில் பால்வளத் துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதங்களுக்குப் பத... மேலும் பார்க்க

17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்: அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்

அரசின் நலத் திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதற்காக 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் அறிவித்தாா். வருவாய் ... மேலும் பார்க்க

ஞானசேகரன் மீதான மற்ற வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் தொடா்பான மற்ற வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய போலீஸாருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல... மேலும் பார்க்க