காத்து வாக்குல ரெண்டு காதல்! தமிழில் புதிய ரொமான்டிக் சீரியல்!
கஞ்சா கடத்தியதாக விவசாயி கைது
குன்றியில் கஞ்சா கடத்தியதாக விவசாயி கைது செய்யப்பட்டாா்.
குன்றி மலைக் கிராமங்களில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலையடுத்து கடம்பூா் உதவி காவல் ஆய்வாளா் பிரபாகரன் தலைமையில் போலீஸாா் குன்றி சாலையில் வாகனத் தணிக்கையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது குன்றி காா்னரில் நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்து போது அவரது பாக்கெட்டில் 150 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவா் பா்கூரைச் சோ்ந்த விவசாயி மாதேவன் (32) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த 150 கிராம் கஞ்சாவை கடம்பூா் போலீஸாா் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனா்.