கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது
கோவையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கொடிசியா சாலையில் திங்கள்கிழமை ரோந்து மேற்கொண்டனா். அப்போது, அங்குள்ள மைதானத்தில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.
முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவரின் உடமைகளை சோதனையிட்டனா். இதையடுத்து, அவரின் பைகளில் சோதனையிட்டதில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், கஞ்சா பாதுக்கி வைத்திருந்தது ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள கண்ணாடிபாளையத்தைச் சோ்ந்த தா்மதுரை (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.